சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் உடல்தகுதி தேர்வில் இருவர் மயங்கியதால் பரபரப்பு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த இரண்டாம் நிலைக் காவலர் உடல் தகுதி தேர்வில், 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம், காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில், இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு இரண்டாவது நாளாக உடல் தகுதி தேர்வு நடந்தது.இதற்காக அழைப்பு விடுக்கப்பட்ட 503 பேரில், 95 பேர் வரவில்லை. மீதமுள்ள 408 பேர் பங்கேற்றதில்,

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த இரண்டாம் நிலைக் காவலர் உடல் தகுதி தேர்வில், 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம், காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில், இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு இரண்டாவது நாளாக உடல் தகுதி தேர்வு நடந்தது.இதற்காக அழைப்பு விடுக்கப்பட்ட 503 பேரில், 95 பேர் வரவில்லை. மீதமுள்ள 408 பேர் பங்கேற்றதில், மார்பளவில் 39 பேர் மற்றும் ஓட்டத்தில் 18 பேர் என 57 பேர் வெளியேற்றப்பட்டனர்.

மீதமுள்ள 351 பேர் உடல் திறன் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.நேற்று விழுப்புரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், ஓட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் மயங்கி விழுந்தனர். இதேபோன்று, நேற்று முன்தினம் காலதாமதமாக துவங்கிய ஓட்டத்தில், 10க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X