பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கடலுார் : சுதந்திர தினத்தையொட்டி கடலுார் அருங்காட்சியகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைபோட்டி நடத்தப்படுகிறது.சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி, கடலுார் அருங்காட்சியகத்தில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு 'எனக்கு பிடித்த சுதந்திர போராட்ட வீரர்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடக்கிறது. கட்டுரைகள் 3 பக்கங்களுக்கு

கடலுார் : சுதந்திர தினத்தையொட்டி கடலுார் அருங்காட்சியகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைபோட்டி நடத்தப்படுகிறது.

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி, கடலுார் அருங்காட்சியகத்தில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு 'எனக்கு பிடித்த சுதந்திர போராட்ட வீரர்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடக்கிறது. கட்டுரைகள் 3 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்.முதல் பக்கத்தில் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

தெளிவாக எழுதிய கட்டுரைகளை புகைப்படம் எடுத்து 86106 27168 என்ற வாட்ஸ்ஆப் அல்லது காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம். பழைய கலெக்டர் அலுவலகம், மஞ்சக்குப்பம், கடலுார் 607001 என்ற முகவரிக்கு அஞ்சலிலும் அனுப்பவும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். போட்டியில் சிறந்த கட்டுரைகளை வழங்கிய மாணவ, மாணவிகளுக்கு வெற்றியாளர் சான்றிதழ் வழங்கப்படும்.

கட்டுரைகளை வரும் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அரசு அருங்காட்சியத்தை 86106 27168 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X