பொது செய்தி

தமிழ்நாடு

மூடியுள்ள நெல்கொள்முதல் நிலையம்: விவசாயிகள் வேதனை

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் 20 நாட்களாக மூடியுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர்.நகர் மலைமேடு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டது. தற்போது ஸ்ரீமுஷ்ணம் பகுதியில்குறுவை சாகுபடி அறுவடை சீசன் துவங்கியுள்ளது. அறுவடை சீசன் துவங்குவதற்கு முன்பு ஸ்ரீமுஷ்ணம் நேரடி

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் 20 நாட்களாக மூடியுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர்.நகர் மலைமேடு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டது. தற்போது ஸ்ரீமுஷ்ணம் பகுதியில்குறுவை சாகுபடி அறுவடை சீசன் துவங்கியுள்ளது. அறுவடை சீசன் துவங்குவதற்கு முன்பு ஸ்ரீமுஷ்ணம் நேரடி நெல்கொள்முதல் நிலையம்திறக்கப்படுவது வழக்கம். இதனை நம்பி ஸ்ரீமுஷ்ணம் பகுதி விவசாயிகள்அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து குவித்துள்ளனர். கடந்த 20 நாட்களாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை.

சில தினங்களாக மாலை, இரவு நேரங்களில் மழை பெய்கிறது. இதனால் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை பாதுகாக்க முடியாமல் மிகவும் அவதியடைகின்றனர். கன மழை காரணமாக தரையில் ஓடும் மழை நீரில்நெல் மணிகள் நனைந்து முளைக்கும் நிலைக்கு உள்ளது. ஸ்ரீமுஷ்ணம் சுற்றுப்பகுதியில்உள்ள பழைய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் புதிய நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணி நடக்கிறது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்ரீமுஷ்ணம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X