தீக்குளித்த இருவர் பலிமதுரை: அனுப்பானடி டீச்சர்ஸ் காலனி செல்வஈஸ்வரி 65. மகன் அருண்சக்கரவர்த்தி 28. குடும்ப பிரச்னையில் இருவரும் தீக்குளித்தனர். அரசு மருத்துவ மனையில் நேற்றுமுன்தினம் செல்வஈஸ்வரி இறந்த நிலையில் நேற்று அருண்சக்கரவர்த்தி இறந்தார். தெப்பக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.13 வயது சிறுமியை மணந்த '19'மதுரை: கீரைத்துரை மேலத்தோப்பு வழிவிட்டான் 19.
இவர் பசுமலை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்ததாக 'போக்சோ' சட்டத்தின்கீழ் நகர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.மின்சாரம் தாக்கி பெயின்டர் பலிமதுரை: அவனியாபுரம் வல்லநாதபுரம் பெயின்டர் ராமநாதன் 45. திருப்பாலை அருகே மேனேந்தலில் புது கட்டடத்திற்கு பெயின்ட் அடிக்கும்போது மின்சாரம் தாக்கி இறந்தார்.டூவீலர் திருடன் கைதுமதுரை: முடக்குச்சாலை குருமூர்த்தி 24. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது டூவீலர் திருடுபோனது. இதுதொடர்பாக செல்லுார் மணவாளன் நகர் 2வது தெரு பாண்டித்துரை மகன் நவீன்குமார் 22, கரிமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ரேஷன் அரிசி, கோதுமை பதுக்கல்மதுரை: ஐராவதநல்லுார் - கல்லம்பல் ரோட்டில் கோடவுனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 டன் ரேஷன் அரிசி மூடைகள், 4.6 டன் கோதுமை மூடைகளை உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கோடவுன் உரிமையாளர் மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு 'கொரில்லா' முத்து 43. இவர் உசிலம்பட்டி பகுதி மகராஜன், மணி, பழனியிடம் ரேஷன் அரிசியை சேகரித்து பதுக்கி வைத்துள்ளார். முத்து கைது செய்யப்பட்டார்.மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டுஅவனியாபுரம்: தெற்குவாசல் சந்திரசேகரன் மனைவி சைலாவதி 70, வில்லாபுரம் ரோட்டில் நடந்து சென்றார்.
சி.பி.ஐ., அதிகாரிகள் எனக்கூறிய 2 பேர், திருடர்கள் வழிப்பறி செய்து விடுவர் எனக்கூறி அவரது 6 பவுன் நகையை வாங்கி பேப்பரில் மடித்து கொடுப்பதாக கூறி திருடி சென்றனர். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.அடுத்தடுத்த வீடுகளில் திருட்டுதிருநகர்: காந்திஜி 2-வது தெரு பன்னீர்செல்வம் 61, ஜூலை 25ல் வெளியூர் சென்று மறுநாள் இரவு திரும்பினார். வீட்டின் கதவை உடைத்து 11 கிராம் நகைகள், 100 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.22 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. பக்கத்திலுள்ள லெனின் வீட்டையும் உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE