ஏற்பாடு! ஆதாரில் மொபைல் எண் மாற்றும் வசதி... வீடு தேடிச் சென்று அஞ்சல் துறை சேவை| Dinamalar

தமிழ்நாடு

ஏற்பாடு! ஆதாரில் மொபைல் எண் மாற்றும் வசதி... வீடு தேடிச் சென்று அஞ்சல் துறை சேவை

Added : ஜூலை 28, 2021
Share
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற ஆதார் அவசியமாகிறது. தபால் சேவை, செல்வ மகள் சேமிப்பு திட்டம், பாஸ்போர்ட் சேவை, ஆயுள் காப்பீடு திட்டம், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி என பல சேவைகளை இந்திய அஞ்சல் துறை செய்து வருகிறது.தற்போது ஆதார் மையங்களையும் ஏற்படுத்தியுள்ளது.புகைப்படம் எடுக்கவும், ஆதாரில் திருத்தம் மேற்கொள்ளவும் அரசு மற்றும் தனியார் ஆதார் மையங்களுக்கு
ஏற்பாடு! ஆதாரில் மொபைல் எண் மாற்றும் வசதி... வீடு தேடிச் சென்று அஞ்சல் துறை சேவை

மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற ஆதார் அவசியமாகிறது. தபால் சேவை, செல்வ மகள் சேமிப்பு திட்டம், பாஸ்போர்ட் சேவை, ஆயுள் காப்பீடு திட்டம், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி என பல சேவைகளை இந்திய அஞ்சல் துறை செய்து வருகிறது.

தற்போது ஆதார் மையங்களையும் ஏற்படுத்தியுள்ளது.புகைப்படம் எடுக்கவும், ஆதாரில் திருத்தம் மேற்கொள்ளவும் அரசு மற்றும் தனியார் ஆதார் மையங்களுக்கு செல்லும் போது, கால விரயம், வீண் அலைச்சல், கூட்ட நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை தவிர்க்க வீடுகளுக்கு நேரிடையாக சென்று ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றித் தரும் சேவையை துவக்குமாறு அஞ்சல் துறை உத்தரவிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இச்சேவை துவங்கப்பட்டுள்ளது. கடலுாரில் கடந்த ஒரு வாரமாக இச்சேவை நடந்து வருகிறது. கடலுார் மற்றும் விருத்தாசலம் என 2 அஞ்சலக கோட்டங்களை கடலுார் மாவட்டம் உள்ளடக்கியது.கடலுார் மற்றும் விருத்தாசலம் கோட்டத்தில் 3 தலைமை தபால் நிலையங்கள், 121 துணை தபால் நிலையங்கள், 420 கிராமப் புற கிளை தபால் நிலையங்கள் உள்ளன.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் ஆதார் வழி பணப் பரிவர்த்தனை சேவையின் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் இணைத்த வங்கிக் கணக்கிலும் வீட்டில் இருந்து பணம் செலுத்தவும், பணம் பெறவும் முடியும்.இதற்காக மாவட்டம் முழுவதும் பணி புரியும்650 தபால்காரர்களுக்கு கையடக்க மின்னணு கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கையடக்க கருவி மற்றும் கைரேகை பதிவு இயந்திரம் மூலமாக ஆதாரில் மொபைல் எண் மாற்றித் தரப்படுகிறது.

அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் 'தபால் சேவை மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் நலன் கருதி அஞ்சல் துறை பல்வேறு சேவைகளை செய்கிறது. இன்றைய காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வங்கி சேவையும் வழங்குகிறது. அடுத்தக் கட்டமாக ஆதாரில் மொபைல் எண் மாற்றித் தரும் சேவையை துவக்கியுள்ளது. பணம் மற்றும் தபால் பட்டுவாடா செய்ய தபால்காரர்கள் வீடு தேடி வரும் போது, ஆதார் எண்ணை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு ரூ 50 கட்டணம் வசூலிக்கப்படும்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X