பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் அப்துல்கலாம் நினைவு நாள்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாள் பல்வேறு இடங்களில் கடைபிடிக்கப்பட்டது. ஜான்சிராணி பூங்காவில் நேதாஜி தேசிய இயக்கம், நேதாஜி இளைஞர் சங்கம், விங் ஆப் பையர் என்.ஜி.ஓ., அமைப்பு சார்பில் தமிழர் இளைஞர் எழுச்சி நாளாக நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். படத்திற்கு வழக்கறிஞர் கமலானந்த் மாலை அணிவித்தார். டாக்டர் லத்தீப்

மதுரை : மதுரையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாள் பல்வேறு இடங்களில் கடைபிடிக்கப்பட்டது.

ஜான்சிராணி பூங்காவில் நேதாஜி தேசிய இயக்கம், நேதாஜி இளைஞர் சங்கம், விங் ஆப் பையர் என்.ஜி.ஓ., அமைப்பு சார்பில் தமிழர் இளைஞர் எழுச்சி நாளாக நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். படத்திற்கு வழக்கறிஞர் கமலானந்த் மாலை அணிவித்தார். டாக்டர் லத்தீப் பங்கேற்றார். கலாம் குறித்து காந்தி மியூசிய முதல்வர் தேவதாஸ் பேசினார். மாணவர்களுக்கு நோட்டு புக்கை என்.ஜி.ஓ., நிர்வாகி வேல்முருகன் வழங்கினார்.l சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்வில் மதுரை கல்லுாரி வாரிய உறுப்பினர் இல.அமுதன் படத்திற்கு மாலையணிவித்தார். மதுரை கல்லுாரி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் முரளிதரன், பெருமாள்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆசிரியர் கண்ணன் ஏற்பாடுகளை செய்தார்.l ஏ.பி.வி.பி., சார்பில் தென் மாநில இணை செயலாளர் கோபி, அலுவலக செயலாளர் செந்தில், நகர் தலைவர் ஜெயசந்திரன், செயலாளர் செல்வி பாரதி மற்றும் நிர்வாகிகள் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் படத்திற்கு மாலை யணிவித்தனர்.l சிம்மக்கலில் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு சார்பில் முதியோர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், இல்ல பொறுப்பாளர் கிரேஸி, சமூக ஆர்வலர் அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.l திருஞானம் துவக்கப் பள்ளி சார்பில் கருப்பிள்ளை ஏந்தல் பகுதியில் பி.டி.ஏ., தலைவர் திவ்யா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தலைமையாசிரியர் சரவணன் மரக்கன்றுகளை வழங்கினார்.சோழவந்தான்-l மன்னாடிமங்கலம் அப்துல் கலாம் அறிவியல் மன்றம் சார்பில் தலைவர் சரவணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ரவிச்சந்திரன் குருவித்துறை ரோட்டில் மரக்கன்றுகள் நட்டனர்.l தேனுார் சுழியம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மன்ற தலைவர் ஜெயக்குமார், செயலாளர் கார்த்திகை குமரன், நிர்வாகிகள் பாண்டிஸ்வரி, சதீஷ் கார்த்தி மரக்கன்றுகள் நட்டனர்.திருப்பரங்குன்றம்l ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி.மக்கள் நல மன்றம் சார்பில் நடந்த நிகழ்விற்கு பொருளாளர் அண்ணாமலை தலைமை வகித்தார். நிர்வாகிகள் காளிதாசன், குலசேகரன் முன்னிலை வகித்தனர்.படத்திற்கு மன்ற தலைவர் அய்யல்ராஜ் மாலை அணிவித்தார். நிர்வாகிகள் செல்வராஜ், துளசிதாஸ், ராஜகண்ணன் கலந்து கொண்டனர். அப்துல்கலாம் குறித்து இளைஞரணி நிர்வாகி அரவிந்தன் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X