தமிழ்நாடு

குறைந்தளவு ஊழியர்களுடன் பணி நடைபெறுவதால் சந்தேகம்! 2023க்குள் பாதாள சாக்கடை திட்டம் நிறைவடையுமா?

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த ஆட்சியில், திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக 268 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி தீர்த்தக்குளம்
குறைந்தளவு ஊழியர்களுடன் பணி நடைபெறுவதால் சந்தேகம்! 2023க்குள் பாதாள சாக்கடை திட்டம் நிறைவடையுமா?

திண்டிவனம் : திண்டிவனத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆட்சியில், திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக 268 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி தீர்த்தக்குளம் பகுதியில் பூமி பூஜை போடப்பட்டது.மூன்று மாதங்களுக்குப் பிறகு மார்ச் மாதம் பணிகள் துவங்கியபோது, சட்டசபை தேர்தல், ஆட்சி மாற்றம், கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.

பல மாதங்களாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் முதல் பாதாள சாக்கடை பணிகள் துவங்கியது.கடந்த 5ம் தேதி பணிகளை கலெக்டர் மோகன், நேரில் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.

இத்திட்டதற்காக இந்திரா நகர், ஜி.என்.எம்.நகர், காவேரிப்பாக்கம், டி.வி.நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் மேன் ேஹால் அமைக்கும் பணி நடக்கிறது.இதே போன்று, திண்டிவனம், சலவாதி ரோட்டில் நகராட்சி குப்பைகளை தரம் பிரிக்கும் இடத்திற்கு அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.

திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணிகளை 3 ஆண்டுகளுக்குள் முடித்துக் கொடுக்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரியம், திட்டப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தியிருந்தாலும், பணிகள் காலதாமதமாக துவங்கியுள்ளது.மேலும், குறைவான ஊழியர்களைக் கொண்டு பணிகள் மேற்கொள்வதால், இப்பணி வரும் 2023ம் ஆண்டிற்குள் நிறைவு பெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

திண்டிவனம் நகர மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டத்தை, விரைந்து முடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X