பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
மந்தாரக்குப்பம் : நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வேலன் திருமண மண்டபத்தில் நடந்தது.ரோட்டரி சங்க தலைவர் பரணிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆளுநர் பாலாஜி, மாவட்ட துணை ஆளுநர் பூங்குன்றன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி குருமூர்த்தி வரவேற்றார். நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்க தலைவராக பாலாஜி, செயலராக கார்த்திகேயன், பொருளாளராக

மந்தாரக்குப்பம் : நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வேலன் திருமண மண்டபத்தில் நடந்தது.

ரோட்டரி சங்க தலைவர் பரணிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆளுநர் பாலாஜி, மாவட்ட துணை ஆளுநர் பூங்குன்றன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி குருமூர்த்தி வரவேற்றார். நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்க தலைவராக பாலாஜி, செயலராக கார்த்திகேயன், பொருளாளராக நடராஜன் பொறுப்பேற்றனர். மேல்பாதி ஊராட்சியை நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம் தத்தெடுத்து தேவையான உதவிகளை செய்ய முடிவு செய்யப்பட்டது.

மேலும் கொரோனா தொற்று பாதிப்பின் போது பொதுமக்களுக்கு சிறப்பாக பணியாற்றிய கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் புலிகேசி, மருத்துவர் பூங்கொடி, சுகாதார ஆய்வாளர் முருகவேல் ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். கெங்கைகொண்டான் பேரூராட்சி, பெரியாக்குறிச்சி ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பெண்களுக்கு தையல் மிஷன் வழங்கப்பட்டன.

புதிய உறுப்பினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.ரோட்டரி சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், நமச்சிவாயம், கோலப்பன், நடராஜன், சிவசங்கர், நாகரத்தினா, ரமேஷ், சுரேஷ் பாபு, சந்திரசேகர், கோபிசந்திரன், ஆல்பர்ட்ஜேசுதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X