பொது செய்தி

தமிழ்நாடு

தற்காலிக மருத்துவ ஊழியர்கள் விழுப்புரத்தில் 3ம் தேதி நேர்காணல்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
விழுப்புரம் : கொரோனா பணியில் தற்காலிக மருத்துவ ஊழியர்களாக பணிபுரிய நேர்காணல் நடக்கிறது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:கொரோனா சிகிச்சை பணிகளுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக உருவாக்கப்பட்ட மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-2, நுண்கதிர் வீச்சாளர் ஆகிய பதவிகளுக்கு தலா 8 பணியிடம் ஒப்பந்த முறையில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட

விழுப்புரம் : கொரோனா பணியில் தற்காலிக மருத்துவ ஊழியர்களாக பணிபுரிய நேர்காணல் நடக்கிறது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:கொரோனா சிகிச்சை பணிகளுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக உருவாக்கப்பட்ட மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-2, நுண்கதிர் வீச்சாளர் ஆகிய பதவிகளுக்கு தலா 8 பணியிடம் ஒப்பந்த முறையில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட உள்ளது.

வரும் 3ம் தேதி காலை 10:00 மணிக்கு மருந்தாளுநருக்கும், 4ம் தேதி காலை 10:00 மணிக்கு ஆய்வக நுட்புநர் நிலை-2க்கும், 5ம் தேதி காலை 10:00 மணிக்கு நுண்கதிர் வீச்சாளர் பதவிக்கு நேர்காணல் நடக்கிறது.இப்பதவிகளுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மாத தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. 6 மாதங்களுக்கு மட்டும் பணியிடம் செல்லுபடியாகும்.

தகுதியும், விரும்பமுடைய விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி மற்றும் தொடர்புடைய சான்றுகளின் அசல் மற்றும் சுய சான்றொப்பமிட்ட நகல்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.நேர்காணல், விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் நடக்கிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X