ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து

Added : ஜூலை 28, 2021
Share
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்மோட்டார் அறையில் உள்ள கெப்பாசிட்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. டாக்டர்கள், செவிலியர்கள் அலறியடித்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உளளது. இங்கு நேற்று மாலை 5.30 மணியளவில் மின்மோட்டார் அறையில் கெப்பாசிட்டர் வெடித்து

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்மோட்டார் அறையில் உள்ள கெப்பாசிட்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

டாக்டர்கள், செவிலியர்கள் அலறியடித்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உளளது. இங்கு நேற்று மாலை 5.30 மணியளவில் மின்மோட்டார் அறையில் கெப்பாசிட்டர் வெடித்து தீப்பிடித்து புகை மூட்டம் ஏற்பட்டது.பணியில் இருந்த டாக்டர் நந்தினி, செவிலியர்கள் சாவித்திரி, தரணி மற்றும் மருத்துவ பணியாளர்கள் அலறியடித்து வெளியேறினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அதிகாரி அறிவழகன் தலைமையில் வீரர்கள் மின்மோட்டார் அறையில் தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.சேத்தியாத்தோப்பு துணைமின் நிலைய அலுவலர் தமிழ்மணி உள்ளிட்ட பணியாளர்கள் மின்மோட்டார் அறையில் ஆய்வு செய்தனர். பழைய கெப்பாசிட்டர் திடீரென வெடித்து புகை மூட்டம் ஏற்பட்டது தெரிந்தது. நேற்று மாலை நேரத்தில் நோயாளிகள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X