பொது செய்தி

தமிழ்நாடு

மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு படையினர் ஆலோசனை

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கடலுார் : புதுச்சேரி இந்திய கடலோர பாதுகாப்பு படை தலைமை அதிகாரி கிருஷ்ணன், தலைமை நாவிக் ஜெகத்ரட்சகன் ஆகியோர் நேற்று கடலுார் துறைமுகம் வந்தனர். சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவ கிராம பிரதிநிதிகள் மற்றும் கடலுார் கடலோர காவல்படையினருடன் சமுதாய நல்லுணர்வு கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். கடலோர காவல்படை சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சிறப்பு எஸ்.ஐ., பாஸ்கரன்

கடலுார் : புதுச்சேரி இந்திய கடலோர பாதுகாப்பு படை தலைமை அதிகாரி கிருஷ்ணன், தலைமை நாவிக் ஜெகத்ரட்சகன் ஆகியோர் நேற்று கடலுார் துறைமுகம் வந்தனர்.

சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவ கிராம பிரதிநிதிகள் மற்றும் கடலுார் கடலோர காவல்படையினருடன் சமுதாய நல்லுணர்வு கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். கடலோர காவல்படை சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சிறப்பு எஸ்.ஐ., பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மீனவர்களின் பிரச்னைகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்து, இலங்கை உள்ளிட்ட அந்நிய நாடுகளின் படகுகள் கடல் பகுதியில் ஊடுருவினாலோ, சந்தேகப்படும்படி நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ தகவல் தெரிவிக்க வேண்டும். இந்திய நாட்டின் பாதுகாப்பு கருதி கடல் வழியாக ஊடுருவலை தடுக்க மீனவர்கள் உதவ வேண்டும் என, கேட்டுக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X