பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்சங்க அலுவலகம் கட்ட கட்டாய நன்கொடையா

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்க அலுவலகம் கட்ட நன்கொடை என்ற பெயரில் கட்டாய வசூல் நடப்பதாக தொழி லாளர்கள் புலம்புகின்றனர். தலைமை அலுவலகத்தில் 52 தொழிற்சங்கங்கள் இருந்தாலும் செயல்படுவதாக 20 உள்ளன. அரசியல் கட்சிகள் சார்ந்த சங்கங்களுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு சங்கத்திற்கு இரண்டாவது அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை : மதுரை அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்க அலுவலகம் கட்ட நன்கொடை என்ற பெயரில் கட்டாய வசூல் நடப்பதாக தொழி லாளர்கள் புலம்புகின்றனர்.

தலைமை அலுவலகத்தில் 52 தொழிற்சங்கங்கள் இருந்தாலும் செயல்படுவதாக 20 உள்ளன. அரசியல் கட்சிகள் சார்ந்த சங்கங்களுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு சங்கத்திற்கு இரண்டாவது அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்திற்கு தேவைப்படும் நிதியை தொழிலாளர்களிடமும் நன்கொடையாகசங்கம் பெற்று வருகிறது. தொழிலாளர்கள் கூறியதாவது: அலுவலகம் கட்ட அந்த சங்கம் சார்ந்தஉறுப்பினரிடம் விருப்பத்தின் பேரில் வசூலிக்கலாம். 'நன்கொடை வழங்காவிட்டால் 'டியூட்டி ஒதுக்கீட்டில்' பார்த்துக்கொள்கிறோம்' என மிரட்டுகின்றனர். சம்பளத்தில் ரூ.3 ஆயிரம் முதல் பிடித்தம் செய்ய படிவமும் வழங்கப்பட்டுள்ளது. 'அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த கூடாது' என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தும் இப்படி நடப்பது வேதனையளிக்கிறது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X