சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., 'மாஜி' மாவட்ட செயலாளர் மீது வழக்கு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : எலவனாசூர்கோட்டை அருகே ஏரி மண் கடத்திய பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அடுத்த இ.என்.பாளையம் ஏரியில் மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டி.எஸ்.பி., மணிமொழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.அப்போது, அங்கு மண் கடத்திய 4

உளுந்துார்பேட்டை : எலவனாசூர்கோட்டை அருகே ஏரி மண் கடத்திய பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை அடுத்த இ.என்.பாளையம் ஏரியில் மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டி.எஸ்.பி., மணிமொழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.அப்போது, அங்கு மண் கடத்திய 4 டிராக்டர் டிப்பர்கள், ஒரு ஜே.சி.பி., ஆகியவற்றை பறிமுதல் செய்து எலவனாசூர்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து எலவனாசூர்கோட்டையைச் சேர்ந்த பா.ம.க.. முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன்நாதன், 50; மாணிக்கம் மகன்கள் அய்யனார், 21; கண்ணன், 22; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X