அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 39 லட்சத்து 10 ஆயிரத்து 739 ரூபாய் உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.பக்தர்கள் ஆடி மாத காணிக்கையாக செலுத்தியிருந்த உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன.
இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்கள் ராமு, ஜோதி ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.அதில், 39 லட்சத்து 10 ஆயிரத்து 739 ரூபாயும், 278 கிராம் தங்க நகைகள், 520 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன.காணிக்கை எண்ணும் பணியில், ஆய்வாளர்கள் அன்பழகன், உமாமகேஸ்வரி, செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE