சிறப்பு முகாம் ! | Dinamalar

சிறப்பு முகாம் !

Added : ஜூலை 28, 2021 | |
மதுரை : மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் இணைய சிறு, குறு விவசாயிகள் என்பதற்கான சான்று வழங்க சிறப்பு முகாம் ஆக., 3, 4 ல் பிர்கா வருவாய் அலுவலகங்களில் நடக்கவுள்ளது. இத்திட்டத்தை நடப்பாண்டில் மாவட்டத்தில் 2100 எக்டேரில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம்

மதுரை : மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் இணைய சிறு, குறு விவசாயிகள் என்பதற்கான சான்று வழங்க சிறப்பு முகாம் ஆக., 3, 4 ல் பிர்கா வருவாய் அலுவலகங்களில் நடக்கவுள்ளது.

இத்திட்டத்தை நடப்பாண்டில் மாவட்டத்தில் 2100 எக்டேரில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் பாசன கருவிகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர விரும்பும் சிறு, குறு விவசாயிகள் அதற்கான சான்றிதழை பெற பிர்கா வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.முகாமில் பங்கேற்பதற்கு முன் நில உடமை ஆவணங்களை பெற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். அதற்கு அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

ஆக., 3 ல் மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம், மேலூர், கொட்டாம்பட்டி மற்றும் வாடிப்பட்டி வட்டாரங்களில் முகாம் நடக்க உள்ளது. ஆக., 4 ல் அலங்காநல்லூர், திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, செல்லம்பட்டி, உசிலம்பட்டி மற்றும் சேடப்பட்டி வட்டாரங்களுக்கு பிர்கா வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் முகாம் நடக்கவுள்ளது.இணையதளத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு முகாம் நடக்கும் நாளன்று சிட்டா, அடங்கல், நில வரைபடம் மற்றும் சிறு, குறு விவசாயி சான்றுகள் வழங்கப்படும். இதன் மூலம் இத்திட்டத்தின் கீழ் முழு பலனை விவசாயிகள் பெறலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X