இந்தியா

வீட்டு வாசலில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
திருக்கனுார் : வீட்டு வாசலில் கஞ்சா செடி வளர்த்த இருவரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா செடி வெட்டி அகற்றப்பட்டது.புதுச்சேரி, தவளகுப்பம் பகுதியில் கஞ்சா விற்ற சந்தோஷ் என்பவரை சில தினங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், காட்டேரிக்குப்பம் பகுதியிலிருந்து கஞ்சா வாங்கியதாக தெரிவித்தார்.தவளக்குப்பம் போலீசார் திருக்கனுார் இன்ஸ்பெக்டர் கிட்லா

திருக்கனுார் : வீட்டு வாசலில் கஞ்சா செடி வளர்த்த இருவரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா செடி வெட்டி அகற்றப்பட்டது.

புதுச்சேரி, தவளகுப்பம் பகுதியில் கஞ்சா விற்ற சந்தோஷ் என்பவரை சில தினங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், காட்டேரிக்குப்பம் பகுதியிலிருந்து கஞ்சா வாங்கியதாக தெரிவித்தார்.தவளக்குப்பம் போலீசார் திருக்கனுார் இன்ஸ்பெக்டர் கிட்லா சத்யநாராயணனுக்கு, தகவல் தெரிவித்தனர். காட்டேரிக்குப்பத்தில் கடந்த டிசம்பர் மாதம் கஞ்சா விற்ற போது கைதான சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்த ஞானமூர்த்தி, 24 ; என்பவரை நேற்று முன்தினம் பிடித்து, விசாரணை நடத்தினர்.

அதில், ஞானமூர்த்தியும், அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ், 22; என்பவரும் சேர்ந்து, நாகராஜ் வீட்டின் எதிரே கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிந்தது.மேற்கு எஸ்.பி., ரங்கநாதன் தலைமையிலான போலீசார், காட்டேரிக்குப்பம் வேளாண் அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் நேற்று காலை 11:00 மணியளவில் நாகராஜ் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்தது கஞ்சா செடி என்பதை உறுதி செய்தனர்.

அதன்பின், 12 அடி உயரத்திற்கு வளர்ந்திருந்த 6 கிலோ 140 கிராம் எடை கொண்ட கஞ்சா செடியை போலீசார் வெட்டி அகற்றினர்.அங்கு திரண்ட மக்களிடம் எஸ்.பி., ரங்கநாதன் கூறுகையில், 'இவரது வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி போன்று மற்ற பகுதியில் வளர்க்கப்படுவது தெரிய வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்றார். நாகராஜ், ஞானமூர்த்தி இருவரையும் கைது செய்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X