விழுப்புரம் : விழுப்புரத்தில் செவிலியர் தவற விட்ட நகையை போலீசில் ஒப்படைத்த டீ மாஸ்டரின் நேர்மையை பாராட்டி, எஸ்.பி., பரிசு வழங்கினார்.
புதுச்சேரி , லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் துரைமுருகன் மனைவி சுந்தரிதேவி, 39; செவிலியர். இவர் இரு தினங்களுக்கு முன் விழுப்புரத்தில் உள்ள தனது தந்தையை காண வந்தார். அப்போது, விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே தான் வைத்திருந்த 10 சவரன் நகையோடு இருந்த பையை தவற விட்டார்.
அங்குள்ள டீ கடையில் மாஸ்டராக பணிபுரியும் விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், 45; என்பவர் 10 சவரன் நகையை எடுத்து, விழுப்புரம் மேற்கு போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் நகை சுந்தரிதேவியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று டீ மாஸ்டர் விஜயகுமார் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு நேற்று வரவழைக்கப்பட்டார். அங்கு, எஸ்.பி., ஸ்ரீநாதா, விஜயகுமாரின் நேர்மையை பாராட்டி, சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE