மாநகராட்சி பொது ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி பொது ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Added : ஜூலை 28, 2021
Share
மதுரை : மதுரை மாநகராட்சி பொது ஏலத்தில் பங்கேற்க தி.மு.க., தலையீடால் அக்கட்சியினர் தவிர பிற கட்சி ஏலதாரர்களுக்கு 'டோக்கன்' வழங்கவில்லை என்ற தினமலர் செய்தி எதிரொலியாக மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் மறு தேதி குறிப்பிடாமல் ஏலத்தை ஒத்தி வைத்தார். மாநகராட்சியில் 28 தினசரி, வாரச்சந்தை உட்பட 67 இனங்களுக்கு பொது ஏலம் அறிவிக்க ப்பட்டது. தி.மு.க., ஏலதாரர்கள் தவிர

மதுரை : மதுரை மாநகராட்சி பொது ஏலத்தில் பங்கேற்க தி.மு.க., தலையீடால் அக்கட்சியினர் தவிர பிற கட்சி ஏலதாரர்களுக்கு 'டோக்கன்' வழங்கவில்லை என்ற தினமலர் செய்தி எதிரொலியாக மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் மறு தேதி குறிப்பிடாமல் ஏலத்தை ஒத்தி வைத்தார்.

மாநகராட்சியில் 28 தினசரி, வாரச்சந்தை உட்பட 67 இனங்களுக்கு பொது ஏலம் அறிவிக்க ப்பட்டது. தி.மு.க., ஏலதாரர்கள் தவிர மற்றவர்களுக்கு ஏலத்தில் பங்கேற்க 'டோக்கன்' வழங்கவில்லை என புகார் எழுந்தது. இது குறித்து 'மாநகராட்சி பொது ஏலத்தில் ஆளும் கட்சி தலையீடு' என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று ஏலத்திற்கான ஒப்பந்தங்களை பெறப்பட்ட நிலையில் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்க கமிஷனர் உத்தரவிட்டார்.அதிகாரிகள் கூறியதாவது: 67 இனங்களுக்கு ஏலம் விட திட்டமிட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவால் 4 இனங்கள் நிறுத்தப்பட்டன.

மீதமுள்ள 63 இனங்களில் 49 இனங்களுக்கு மட்டும் 163 பேர் விண்ணப்பத்தினர். ஏலத்தின் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருந்ததால் ஒத்தி வைக்கப்பட்டது.பஸ் ஸ்டாண்ட் பகுதி வாகன காப்பகங்களில் ரூ.6 கட்டணம் வசூலிக்கும் நிலையில் ஒப்பந்தங்களில் ரூ.10 என உயர்த்தி அறிவித்ததற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜி.எஸ்.டி., உட்பட ரூ.7 முதல் 8 வரை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X