செயின் பறித்த ரவுடிக்கு வலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செயின் பறித்த ரவுடிக்கு வலை

Added : ஜூலை 28, 2021
Share
கடலுார் : நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறித்த ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் கனகராஜ் மனைவி வெண்ணிலா, 55; இவர், நேற்று காலை அதே பகுதியில் விநாயகர் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். சிறிது துாரம் சென்றதும் குப்பங்குளத்தைச் சேர்ந்த ரவுடி ராஜா மகன் விக்கி (எ) விக்ரமன்,28; பைக்கில்

கடலுார் : நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறித்த ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் கனகராஜ் மனைவி வெண்ணிலா, 55; இவர், நேற்று காலை அதே பகுதியில் விநாயகர் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். சிறிது துாரம் சென்றதும் குப்பங்குளத்தைச் சேர்ந்த ரவுடி ராஜா மகன் விக்கி (எ) விக்ரமன்,28; பைக்கில் வந்து வெண்ணிலாவை வழிமறித்தார். கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள 1 சவரன் செயினை பறித்துச் சென்றார். புகாரின் பேரில் கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விக்கி (எ) விக்ரமனை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X