அ.தி.மு.க., விவகாரங்களில் பா.ஜ., தலையிடவில்லை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அ.தி.மு.க., விவகாரங்களில் பா.ஜ., தலையிடவில்லை'

Added : ஜூலை 28, 2021
Share
சென்னை : ''அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணி மிக சிறப்பாக இருக்கிறது'' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகர் பா.ஜ. அலுவலகத்தில் அவரின் உருவப்படத்திற்கு அண்ணாமலை நேற்று மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அப்துல் கலாம் தமிழகம் மற்றும் தேசத்துக்காக பேசாத சபைகள் இல்லை; செய்யாத

சென்னை : ''அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணி மிக சிறப்பாக இருக்கிறது'' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகர் பா.ஜ. அலுவலகத்தில் அவரின் உருவப்படத்திற்கு அண்ணாமலை நேற்று மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அப்துல் கலாம் தமிழகம் மற்றும் தேசத்துக்காக பேசாத சபைகள் இல்லை; செய்யாத காரியங்கள் இல்லை. அவர் ராணுவ ஆராய்ச்சி துறையில் பெரிய சாதனைகளை நிகழ்த்தினார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அணுசக்தி சோதனை நடத்தி இந்தியாவை சக்தி வாய்ந்த நாடாக மாற்றினார்.

வாஜ்பாய் ஆட்சியின் போது தான் நாட்டின் உண்மையான வளர்ச்சி ஆரம்பமானது. அப்துல் கலாமை ஜனாதிபதியாக அமர்த்தி அழகு பார்த்தது பா.ஜ. கட்சியே. நம் கட்சி இஸ்லாமியரா கிறிஸ்தவரா என்று பார்ப்பதில்லை. அவர் தேசியவாதியா நாட்டுக்காக வேலை செய்தவரா என்று பார்த்து மிக பெரிய பொறுப்பை வழங்கியது. ஜனாதிபதி பதவிக்கு பின் கலாம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தி வந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதை பாக்கியமாக கருதுகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இருக்கிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமரை பார்க்க உரிமை இருக்கிறது. இதை எப்படி அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ. தலையிடுகிறது என்று கூற முடியும்?பிரதமருடனான சந்திப்பின் போது தமிழக நலன் தொடர்பாக வலியுறுத்தியதாக அ.தி.மு.க. தலைவர்களே அறிக்கை விடுத்துள்ளனர். இதை அரசியலாக பார்க்க ஒரு விஷயமும் இல்லை.எங்கள் கூட்டணி மிக சிறப்பாக இருக்கிறது என்பதற்கு இதை விட வெளிப்படையாக எதிர்க்கட்சிகளுக்கு சொல்ல முடியாது.இரண்டாம் முறை ஜனாதிபதியாக அப்துல் கலாம் வரக்கூடாது என்பதற்கு தி.மு.க. எப்படி வேலை செய்தது என்பது அனைவருக்கும் தெரியும். இன்று இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலர்கள் என்று சொல்லி கொள்வது எவ்வளவு பொய் என்பதும் தமிழக மக்களுக்கு தெரியும்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X