அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாற்று கட்சியினரை இழுக்க கமல் முடிவு

Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி மாற்று கட்சியினரை மக்கள் நீதி மய்யத்திற்கு இழுக்க நிர்வாகிகளுக்கு கமல் உத்தரவிட்டுள்ளார். சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி தலைவர் கமல் கடைசி கட்டத்தில் தோல்வியை தழுவினார். தோல்விக்கு பின் மூத்த நிர்வாகிகள் பலரும் கட்சியை விட்டு விலகினர். புதியவர்களுக்கு கட்சியில் இடமும் பதவியும்

சென்னை : உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி மாற்று கட்சியினரை மக்கள் நீதி மய்யத்திற்கு இழுக்க நிர்வாகிகளுக்கு கமல் உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி தலைவர் கமல் கடைசி கட்டத்தில் தோல்வியை தழுவினார். தோல்விக்கு பின் மூத்த நிர்வாகிகள் பலரும் கட்சியை விட்டு விலகினர். புதியவர்களுக்கு கட்சியில் இடமும் பதவியும் கொடுத்த கமல் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கு நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் தயார்படுத்தி வருகிறார். இதற்கிடையே ஆக. 1ல் கோவை தெற்கு தொகுதியில் தனக்கு வாக்களித்தவர் களுக்கு நன்றி சொல்ல கமல் நேரில் செல்கிறார்.

தற்போது கட்சியைப் பலப்படுத்த திட்டமிட்டு உறுப்பினர் சேர்க்கையோடு அதிருப்தியில் உள்ள மாற்று கட்சியினரை கட்சிக்குள் இழுக்கும்படி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னையில் ஆவடி பகுதி நிர்வாகிகள் ஆக. 1ல் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தபட்சம் ௫0 புதிய உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
28-ஜூலை-202113:09:06 IST Report Abuse
vpurushothaman இருந்தவங்களையே காப்பாத்திக்க வக்கில்லை. இந்த லட்சனத்திலே " இழுக்கறாரா"? வெள்ளைக் காக்கா பறக்குதுன்னா - கேக்கறவனுக்கு எங்கே போச்சு....?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X