சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிரம்பியது வைகை அணை 3ம் கட்ட வெள்ள எச்சரிக்கை

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி, : தேனி மாவட்டம் வைகை அணை நீர்மட்டம் 69 அடியானதை தொடர்ந்து 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையில் இருந்து வினாடிக்கு 730 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் வைகை அணை நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 8-ல் நீர்மட்டம் 66 அடியானபோது அணையில் முதல் கட்டம், ஜூலை 24 ல் 68.50 அடியானதும் 2ம்கட்ட வெள்ள அபாய

ஆண்டிபட்டி, : தேனி மாவட்டம் வைகை அணை நீர்மட்டம் 69 அடியானதை தொடர்ந்து 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையில் இருந்து வினாடிக்கு 730 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் வைகை அணை நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 8-ல் நீர்மட்டம் 66 அடியானபோது அணையில் முதல் கட்டம், ஜூலை 24 ல் 68.50 அடியானதும் 2ம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன. நேற்று மதியம் 1:00 மணிக்கு அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தது. (மொத்த உயரம் 71 அடி). இதனை தொடர்ந்து அணையில் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் உபரி நீர் பெரிய மதகுகள் மூலம் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

தேனி கலெக்டர் முரளிதரன், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சுகுமாறன், வைகை அணை உதவி செயற் பொறியாளர் செல்வம் பங்கேற்றனர். அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1731 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 900 கன அடியும், மதுரை, ஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 69 கன அடியும் ஏற்கனவே வெளியேறுகிறது. உபரியாக 730 கன அடிநீர் நேற்று ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X