அரசியல் செய்தி

தமிழ்நாடு

வன்னியர் ஒதுக்கீடு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
சென்னை, : 'வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் வாயிலாக, வன்னியர்களின் சமூக நிலையும், வாழ்க்கைத் தரமும் மேம்படும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவரது அறிக்கை:வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம், நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்தே செயல்படுத்தப்படும் என, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து படிப்புகளிலும், 10.50 சதவீதம் இடங்கள், வன்னியர் சமுதாய மாணவர்களுக்கு

சென்னை, : 'வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் வாயிலாக, வன்னியர்களின் சமூக நிலையும், வாழ்க்கைத் தரமும் மேம்படும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம், நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்தே செயல்படுத்தப்படும் என, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து படிப்புகளிலும், 10.50 சதவீதம் இடங்கள், வன்னியர் சமுதாய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். மருத்துவ கல்வி இடங்களுக்கு, 6,000 மாணவர் சேர்க்கை நடத்தினால், வன்னியர் மாணவர்களுக்கு, 630 இடங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.வேலை வாய்ப்பிலும், வன்னியர்களுக்கு, 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

ஓராண்டில், ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டால், வன்னியர்களுக்கு குறைந்தது, 10 ஆயிரத்து, 500 வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை செயல்படுத்துவதன் வாயிலாக, வன்னியர்களின் சமூக நிலையும், வாழ்க்கைத் தரமும் மேம்படும். இதற்காக, முதல்வர் ஸ்டாலினை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X