வன்னியர் உள் ஒதுக்கீடு அரசாணை விவகாரம்; ஸ்டாலின் குழப்பங்களை தீர்த்த அதிகாரிகள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வன்னியர் உள் ஒதுக்கீடு அரசாணை விவகாரம்; ஸ்டாலின் குழப்பங்களை தீர்த்த அதிகாரிகள்

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (20)
Share
வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க., அரசு என்ன செய்யப் போகிறது என்பதை, தமிழகத்தில் உள்ள பல்வேறு ஜாதி தலைவர்களும் ஆவலோடு எதிர்பார்த்தனர். நேற்று முன்தினம் இரவு, அரசாணை வெளியானது. ஆனால், அரசாணை வெளியிடுவதற்கு முன், ஸ்டாலினுக்கு நிறைய குழப்பங்கள் இருந்தன.இந்த உள் ஒதுக்கீட்டுக்கு, வன்னியர் அல்லாத 115 ஜாதிகளை சேர்ந்தோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசாணை
CM Stalin, Stalin, MK Stalin, DMK

வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க., அரசு என்ன செய்யப் போகிறது என்பதை, தமிழகத்தில் உள்ள பல்வேறு ஜாதி தலைவர்களும் ஆவலோடு எதிர்பார்த்தனர். நேற்று முன்தினம் இரவு, அரசாணை வெளியானது. ஆனால், அரசாணை வெளியிடுவதற்கு முன், ஸ்டாலினுக்கு நிறைய குழப்பங்கள் இருந்தன.

இந்த உள் ஒதுக்கீட்டுக்கு, வன்னியர் அல்லாத 115 ஜாதிகளை சேர்ந்தோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசாணை வெளியிட்டால், 115 ஜாதியினரும் தி.மு.க.,வுக்கு எதிராக போய்விடலாம் என்ற அச்சம் இருந்தது.ஆனால், புள்ளிவிபரங்களை எடுத்து கூறி, முதல்வர் ஸ்டாலினை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். அதன்பிறகே, அரசாணை வெளியானது.

இது குறித்து, அதிகாரிகள் சிலர் கூறியதாவது:சட்டசபை தேர்தலில் வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு உதவும் என, முதல்வராக இருந்த இ.பி.எஸ்., நினைத்தார். அதனால், ஆட்சியின் கடைசி சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளில், கடைசி தீர்மானமாக, 10.5 சதவீத வன்னியர் உள் இடஒதுக்கீட்டை அறிவித்து, அதை சட்டமாக்கினார். ஆனால், அதற்கான அரசாணை போடப்படுவதற்குள் தேர்தல் வந்துவிட்டது.

தேர்தலில் அ.தி.மு.க.,தோற்று விட்டது.இடஒதுக்கீடு அறிவிப்பு, அ.தி.மு.க., -- பா.ம.க., கூட்டணிக்கு, வட மாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களிலும் சாதகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க., கூட்டணி தோல்வியே அடைந்தது.

வட மாவட்டங்களில் உள்ள 100 தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி 80 இடங்களில் ஜெயித்து விட்டது. அதனால், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளித்த மக்களுக்கு, உள் இடஒதுக்கீடு அரசாணை வெளியிட்டு நன்மை செய்யலாம். அதுதான் சரியாக இருக்கும் என, அரசு அதிகாரிகள், முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்து கூறினர்.


latest tamil newsஅத்துடன், ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், ஏழு மாவட்டங்களில் வன்னியர்களே அதிக அளவில் உள்ளனர். அதனால், அரசாணை தி.மு.க.,வுக்கு பலமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். பிற ஜாதி ஹிந்துக்கள், தி.மு.க.,வுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால் என்ன செய்வது என, முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.

அவர்களையும் திருப்திபடுத்த சில அறிவிப்புகளை வெளியிடலாம். ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக அமைக்கப்பட்ட, குலசேகரன் கமிஷன் அறிக்கையை விரைந்து பெற்று, அதையும் செயல்படுத்தலாம் என கூறியுள்ளனர். இதையடுத்தே, வன்னியர் உள் ஒதுக்கீட்டுஅரசாணையை வெளியிட, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


எதிர்ப்பு எடுபடாது!


ஏற்கனவே, வன்னியர் உள் ஒதுக்கீட்டை, இ.பி.எஸ்., சட்டமாக்கி விட்டார். அதற்கான அரசாணை மட்டுமே வெளியாக வேண்டும். புதிய அரசு அதை செய்து தான் ஆக வேண்டும். எதிர்த்து போனால், அரசியல் ரீதியில் பலவீனமாகி விடும். அதை உணர்ந்து தான் தி.மு.க., அரசு, நெருடல் எதுவும் இல்லாமல் அரசாணை வெளியிட்டு விட்டது.

இதை எதிர்த்து போராடுவது, யாருக்கும் நல்ல பலனை ஏற்படுத்தாது. ஏற்கனவே, மண்டல் கமிஷன் அறிக்கையை வைத்து, முன்னாள் பிரதமர் வி.பி.சிங், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கினார். இதனால், நாடு முழுதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பின், அப்படியே அமுங்கி போய் விட்டது. அப்படித் தான், வன்னியர் உள் ஒதுக்கீடு அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அது காலப்போக்கில் அடங்கி விடும்.
-- கோலாகல சீனிவாஸ், அரசியல் விமர்சகர்.

- நமது நிருபர் --

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X