ஏ.டி.எம்., கட்டணம்: ஆகஸ்ட் முதல் உயர்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஏ.டி.எம்., கட்டணம்: ஆகஸ்ட் முதல் உயர்வு

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி: ஏ.டி.எம்., இயந்திரங்களில் இருந்து பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனை கட்டணம் ஆக., 1ம் தேதி முதல் உயருகிறது.ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாக பணம் எடுத்துக் கொள்ளலாம். ஏ.டி.எம்., இயந்திரங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் 2014ல் திருத்தி அமைக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு
ATM,Bank,Debit Card

புதுடில்லி: ஏ.டி.எம்., இயந்திரங்களில் இருந்து பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனை கட்டணம் ஆக., 1ம் தேதி முதல் உயருகிறது.

ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாக பணம் எடுத்துக் கொள்ளலாம். ஏ.டி.எம்., இயந்திரங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் 2014ல் திருத்தி அமைக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு பின் தற்போது ரிசர்வ் வங்கி மீண்டும் திருத்தி அமைத்துள்ளது.

இதன்படி வங்கிக் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் மாதத்துக்கு ஐந்து முறை கட்டணமின்றி பரிவர்த்தனை செய்யலாம். ஐந்து முறைக்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும், கட்டணம் 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது.


latest tamil newsபணப் பரிவர்த்தனை அல்லாத பிற சேவைக்கு ஏ.டி.எம்., இயந்திரத்தை பயன்படுத்த கட்டணம், 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஆக., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதர வங்கிகளின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் மாதத்துக்கு மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.

அதற்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்தாண்டு ஜன., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X