பொது செய்தி

இந்தியா

இந்திய கப்பல் ஊழியர்களுக்கு சீன துறைமுகத்தில் தடையா?

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : சீனாவுக்கு சரக்கு ஏற்றி செல்லும் வர்த்தக கப்பல்களில் இந்திய ஊழியர்கள் பணியில் இருந்தால் அந்த கப்பல்கள் துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.ஆஸ்திரேலிய நிலக்கரியை ஏற்றிக் கொண்டு இந்திய கப்பல் ஊழியர்களுடன் கடந்த ஆண்டு சீனா சென்ற இரண்டு சரக்கு கப்பல்கள் பல மாத காத்திருப்புக்கு பின் சீனாவுக்குள்
China, India, Ship

புதுடில்லி : சீனாவுக்கு சரக்கு ஏற்றி செல்லும் வர்த்தக கப்பல்களில் இந்திய ஊழியர்கள் பணியில் இருந்தால் அந்த கப்பல்கள் துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

ஆஸ்திரேலிய நிலக்கரியை ஏற்றிக் கொண்டு இந்திய கப்பல் ஊழியர்களுடன் கடந்த ஆண்டு சீனா சென்ற இரண்டு சரக்கு கப்பல்கள் பல மாத காத்திருப்புக்கு பின் சீனாவுக்குள் அனுமதிக்கப்பட்டன. அனைத்திந்திய கப்பல் ஊழியர்கள் சங்கத்தினர் துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனவாலுக்கு கடிதம் எழுதினர்.


latest tamil news



அதில் 'சீனாவுக்கு செல்லும் சரக்கு கப்பல்களில் இந்திய ஊழியர்கள் பணியில் இருந்தால் அந்த கப்பல்கள் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல் ஊழியர்கள் பணியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

'இந்திய ஊழியர்களுடன் வரும் சரக்கு கப்பல்களை துறைமுகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம்' என சீன அரசு அதிகாரப்பூர்வமற்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. இதை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

''சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விசாரித்ததில் அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது'' என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸாவோ லிஜியன் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanujan - Nagercoil,இந்தியா
28-ஜூலை-202115:28:19 IST Report Abuse
Ramanujan இது உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனது சொந்தக்காரர் ஒருவர் சிங்கப்பூர் கப்பல் கம்பெனியில் என்ஜினீயர் ஆக இருந்தார் .இளம் வயது தான். இப்போது திரும்பி வந்து விட்டார். காரணம் தெரிய வில்லை. இப்போது புரிகிறது. சீனா காரன் புத்தி உடையவன். எதையும் செய்வான். வாய் பீற்ற மாட்டான். அதனால்தான் இன்று அமெரிக்காவை மிஞ்சுகிறான். நம் பாராளுமன்றம் நடக்கும் யோக்கியதை பார்த்தால் போதும். நமக்கு என்று விடிவு வரும் என்று.
Rate this:
Cancel
Gopalakrishnan Thyagarajan - Kuwait City,லிபியா
28-ஜூலை-202114:50:41 IST Report Abuse
Gopalakrishnan Thyagarajan இந்தியா எல்லா சீனா பொருள்களை உடனே தடை செய்ய வேண்டும்
Rate this:
Cancel
Raja - Coimbatore,இந்தியா
28-ஜூலை-202111:44:29 IST Report Abuse
Raja இந்த செய்தியை இந்திய வெளியுறவு அமைச்சகமே மறுத்துள்ளது. அதையும் ஏன் பதிவிடவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X