பொது செய்தி

இந்தியா

டில்லி போலீஸ் கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமனம்

Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : டில்லி போலீஸ் கமிஷனராக, ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டு உள்ளார்.தற்போது எல்லை பாதுகாப்பு படை தலைவராக இருக்கும் அஸ்தானா, இன்னும் 3 நாட்களில்(ஜூலை31) ஓய்வு பெற இருந்தார். அவருக்கு, பொது நோக்குடன் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, டில்லி போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, பிரதமர் தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழு பிறப்பித்து
Rakesh Asthana, CBI, Delhi, Top Cop, Retirement, police commisner, ராகேஷ் அஸ்தானா, டில்லி, சிபிஐ, போலீஸ் கமிஷனர்

புதுடில்லி : டில்லி போலீஸ் கமிஷனராக, ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டு உள்ளார்.

தற்போது எல்லை பாதுகாப்பு படை தலைவராக இருக்கும் அஸ்தானா, இன்னும் 3 நாட்களில்(ஜூலை31) ஓய்வு பெற இருந்தார். அவருக்கு, பொது நோக்குடன் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, டில்லி போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, பிரதமர் தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழு பிறப்பித்து உள்ளது. உடனடியாக பதவியேற்கும்படி அஸ்தானாவிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்து உள்ளது.


latest tamil news


குஜராத்தைச் சேர்ந்த 1984 -ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த ராகேஸ் அஸ்தானா, 2014ல் சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதற்கு, அப்போதைய சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்த 2018 ல் சிபிஐ அமைப்பில் இருந்து மாற்றப்பட்டு, 2019ல் விமான போக்குவரத்து பாதுகாப்பு இயக்குநர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டார். 2019ல் மொயின் குரேஷியிடம் இருந்து லஞ்சம் வாங்கிய வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அஸ்தானா, பின்னர் 2020ம் ஆண்டில், ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திடம் இருந்தும் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார். பின்னர், எல்லை பாதுகாப்பு படை தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூலை-202119:14:19 IST Report Abuse
அப்புசாமி பேசாம இருக்க்ய்ற கெழ போல்ட்டுகளுக்கு வேலையை 75 வயசு வரை நீட்டித்துவிட்டு, இளைஞர்களுக்கு இப்பவே பென்சன் குடுக்க ஆரம்பிக்கலாம்.
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
28-ஜூலை-202115:26:38 IST Report Abuse
R.RAMACHANDRAN லஞ்ச ஊழல் பேர்வழிகள் உயர் பதவியில் நியமிக்கப்படுவதால் இந்த நாட்டில் லஞ்ச ஊழல் பெருகுகிறது.அவர்களுக்கு கீழ் பணியாற்றுபவர்கள் நேர்மையாக பனி செய்ய முடியாது. அப்படிப்பட்ட குற்றவாளிகள் ஆட்சியில் இருப்பவர்களுக்கு தேவைப்படுகிறார்கள் அவர்கள் கட்டளை எத்தகையதாயினும் நிறைவேற்ற எங்கிருந்து நாடு முன்னேறும்.
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
28-ஜூலை-202109:41:57 IST Report Abuse
Appan இந்த நியமனம் பிஜேபி என்ன செய்ய போகிறது என்தை காட்டுகிறது..பிஜேபி டெல்லி கெஜ்ரிவாலை மிரட்ட இப்படி செய்துள்ளது..பாவம் பிஜேபிக்கு கேட்ட காலம்..கேட்ட புத்தி...இப்படி ஆட்சி நடந்தால் இந்தியாவுக்கு நல்லதல்ல..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X