பொது செய்தி

தமிழ்நாடு

'யு-டியூப் சேனல்' நடத்தும் ஆசிரியர்கள்: 'கண்டுகொள்ளுமா' கல்வித்துறை?

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோவை: அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பாக, பணியில் இருக்கும் போதே, 'யு-டியூப் சேனல்' நடத்தி, கற்பித்தல் பணிகளில் கவனம் செலுத்தாமல், சில ஆசிரியர்கள் ஊதியம் ஈட்டுவதில் ஆர்வம் காட்டுவதாக, புகார் எழுந்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், அரசு சார்பில், tnschools.in என்ற இணையதளம் உள்ளது. இதில், அரசு சுற்றறிக்கையின்
யுடியூப், சேனல், ஆசிரியர்கள், கல்வித்துறை

கோவை: அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பாக, பணியில் இருக்கும் போதே, 'யு-டியூப் சேனல்' நடத்தி, கற்பித்தல் பணிகளில் கவனம் செலுத்தாமல், சில ஆசிரியர்கள் ஊதியம் ஈட்டுவதில் ஆர்வம் காட்டுவதாக, புகார் எழுந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், அரசு சார்பில், tnschools.in என்ற இணையதளம் உள்ளது. இதில், அரசு சுற்றறிக்கையின் முக்கிய அறிவிப்புகள் பதிவேற்றப்படும். ஆனால், பள்ளி செயல்பாடுகள், நிர்வாக நடைமுறைகள் குறித்த அறிவிப்புகள் இதில் இடம்பெறாது. முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சென்றடையும் முன்பு, சில யு-டியூப் சேனல்களில், இந்த சுற்றறிக்கைகள் பதிவேற்றப்படுகின்றன. இதனால் உடனுக்குடன் ஆசிரியர்கள், தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அதிக பார்வையாளர்கள் சேனலை பார்வையிட வேண்டுமென்பதற்காக, சமீப காலமாக, சில தவறான, பழைய அறிவிப்புகளும், தேதி மாற்றி பதிவேற்றப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்துவது அதிகரித்து வருகிறது.


latest tamil news


கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது:பணியில் இருக்கும் போது, பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ வேறு தொழில்களில் ஈடுபட கூடாதென, அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், யு-டியூப் சேனல்களை, சில அரசுப்பள்ளி ஆசிரியர்களே நடத்தி வருவதோடு, கற்பித்தல் பணிகளிலும், முழுமையாக கவனம் செலுத்துவதில்லை. தற்போது ஆன்லைன் வகுப்பு நடப்பதால், எந்நேரமும் மொபைல்போனுடன் இருக்கும் சில ஆசிரியர்கள், புதிதாக கல்வி யு-டியூப் சேனல்களை துவங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.இதன்மூலம் ஊதியம் ஈட்டுவதோடு, நம்பகத்தன்மையற்ற தகவல்களை பகிர்வதும் அதிகரித்துள்ளது. பள்ளி வேலை நேரத்தில், சொந்த பணிகளில் ஈடுபடுவோரை தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். இவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
28-ஜூலை-202112:55:06 IST Report Abuse
vpurushothaman அனுபவமில்லாதவர் துறை அமைச்சர். தகுதியில்லாதவர் பாட நூல் கழகத் தலைவர். இதிலே இது வேறே. கல்வித் துறை உருப்பட்ட மாதிரிதான்.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
28-ஜூலை-202110:16:38 IST Report Abuse
Rengaraj வாட்ஸாப்ப் மூலம் பயிற்சி பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என்று இப்போது அரசே சொல்லியிருக்கிறது. மாணவர்கள் விடைத்தாள்களை வாட்ஸாப்ப் மூலம் அனுப்பி அதை திருத்தி மீண்டும் அவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் சொல்கிறது. ஆதாரங்களை மாவட்ட கல்வி அலுவலர் அல்லது மாநகராட்சி கல்வி அலுவலர் பார்வைக்கு அனுப்ப சொல்கிறார்கள். புரியவில்லை என்றால் யூ டியூபில் வீடியோ அனுப்பிதான் புரியவைக்க வேண்டும். இதை பெரிதாக குற்றம் சொல்ல வேண்டியதில்லை. பள்ளிக்கூடங்கள் திறந்தால் இந்தமாதிரி பிரச்சினைகள் வராது. அதற்கு ஆவண செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
28-ஜூலை-202110:00:17 IST Report Abuse
ஆனந்த் கறுப்பர் கூட்டத்தின் பின்னால் இருப்பவர்கள் இதை கண்டு கொள்ளக்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X