நல்லவேளை ஆப்கன் - அமெரிக்க விவகாரத்திலாவது மோடியை கண்டிக்காமல் விட்டீர்களே...

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஆப்கன் தலிபான் விவகாரத்தில், அமெரிக்கா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, அந்நாட்டு ராணுவம் முன்னேற, போர் விமானங்கள் மூலம் வான் ஆதரவு அளித்து வருகிறது. இது, ஆப்கனில் வாலை ஆட்ட நினைக்கும் பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.- பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி'நல்லவேளை, ஆப்கன் - அமெரிக்க விவகாரத்திலாவது, மோடியை வம்படியாக இழுத்து, கண்டிக்காமல் விட்டீர்களே...' என,
சுப்ரமணியசாமி, சீனிவாசன், சீமான், நல்லகண்ணு, அழகிரி

ஆப்கன் தலிபான் விவகாரத்தில், அமெரிக்கா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, அந்நாட்டு ராணுவம் முன்னேற, போர் விமானங்கள் மூலம் வான் ஆதரவு அளித்து வருகிறது. இது, ஆப்கனில் வாலை ஆட்ட நினைக்கும் பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
- பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி


'நல்லவேளை, ஆப்கன் - அமெரிக்க விவகாரத்திலாவது, மோடியை வம்படியாக இழுத்து, கண்டிக்காமல் விட்டீர்களே...' என, நிம்மதி தெரிவிக்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை.



தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய, அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் வரவில்லையே என பெண்களும், பிற பிரிவினரும் வருத்தத்துடனும், ஏக்கத்துடனும் உள்ளனர்.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன்


'அவங்களுக்கு வருத்தம் இருக்கிறதோ, இல்லையோ, உங்களைப் போன்றவர்களுக்கு ரொம்ப இருக்கிறது...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு.



அ.தி.மு.க.,வின் தோளேறி, பின்வாசல் வழியாக ஆட்சி அதிகாரத்தை பிடிக்க துடிக்கும் பா.ஜ.,வை, முதன்மை எதிரியாக, தி.மு.க., கட்டமைக்கிறது. அவர்களை மென்மையான போக்குடன் அணுகுவதும் ஏமாற்றத்தை தருகிறது
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


latest tamil news




'தி.மு.க., - நாம் தமிழர் என்ற ரீதியில் அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். ஆனால் மக்கள் அப்படி நினைக்கவில்லையே ராஜா...' என, சொல்லத் துாண்டும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.



மத்திய அரசுக்கு எதிராக கருத்து சொன்னது மற்றும் விமர்சனம் செய்தது போன்ற காரணங்களால், ஏராளமான சிந்தனையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.
- இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு


'ஜனநாயகம் என்ற பெயரில், சர்வாதிகாரம், நக்சல் தீவிரவாதத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் மட்டும் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். இது, ஜனநாயகத்தை காப்பதற்கான நடவடிக்கை...' என, பதிலளிக்கத் துாண்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பேச்சு.



அ.தி.மு.க., முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. ஊழல் செய்யவில்லை என அவர் சொல்ல வேண்டும் அல்லது செய்தேன் எனக் கூற வேண்டும். அதை விட்டு, பழிவாங்கும் நடவடிக்கை என்பதெல்லாம் தவறு.
- தமிழக காங்., தலைவர் அழகிரி


'நீண்ட காலமாக இதுபோன்ற சோதனைகள், அரசியல் காரணங்களுக்காக தான் நடத்தப்படுகின்றன என்பதால், அந்த, 'மாஜி' அப்படி சொல்லி இருப்பார்...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் நல்லவேளை, ஆப்கன் - அமெரிக்க விவகாரத்திலாவது / விவாக ரத்திலாவது?
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
28-ஜூலை-202116:37:26 IST Report Abuse
vbs manian ஐவரும் எத்தனையோ தோள்களில் ஏறி பார்க்கிறார். ஒன்றும் பலனில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X