பொது செய்தி

இந்தியா

தொற்று பாதிப்பு குறைந்திருப்பது 3வது அலைக்கான அறிகுறியா?

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: கோவிட் பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் தாக்கம் உச்சம் அடைவதற்கு முன், தொற்று பாதிப்புகள் முழுவதுமாக சரிந்தது. அதுபோலவே தற்போதும் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கோவிட் தாக்கம் குறைந்துள்ளது. இது மூன்றாம் அலைக்கான அறிகுறியாக இருக்கலாம் என, வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர். கோவிட் பெருந்தொற்றின் முதல் அலையின்போது 2020 மே 1ம்

சென்னை: கோவிட் பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் தாக்கம் உச்சம் அடைவதற்கு முன், தொற்று பாதிப்புகள் முழுவதுமாக சரிந்தது. அதுபோலவே தற்போதும் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கோவிட் தாக்கம் குறைந்துள்ளது. இது மூன்றாம் அலைக்கான அறிகுறியாக இருக்கலாம் என, வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.



latest tamil news



கோவிட் பெருந்தொற்றின் முதல் அலையின்போது 2020 மே 1ம் தேதி தொற்று எண்ணிக்கை 111 ஆக இருந்தது. அதன் பின் தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து ஜூன் மாதத்தில் உச்சத்தைத் தொட்டது. அதுபோல் இரண்டாம் அலையின்போது 2021 பிப்ரவரி 1ம் தேதி 119 ஆக இருந்த ஒரு நாள் தொற்று பாதிப்பு, அதன்பின் உச்சத்தைத் தொட்டது.
தற்போது தமிழகத்தில் தினசரி தொற்று 1,700 ஆக பதிவாகி வருகிறது. இது கடந்த ஆண்டு கோவிட் தொற்று உச்சமடைவதற்கு முன் நவம்பர் மாதத்தில் பதிவான தொற்று எண்ணிக்கையைப் ஒத்திருப்பது குறிப்படத்தக்கது. இதனால், இது மூன்றாம் அலையின் தொடக்கமாக இருக்கலாம் என, மருத்துவ வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.


latest tamil news



மூன்றாம் அலையைத் தவிர்க்க சென்னை உள்ளிட்ட நகரங்களில் தொடர்ச்சியாக கோவிட் பரிசோதனைகள் மேற்கொள்வது; அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூலை-202119:10:43 IST Report Abuse
அப்புசாமி தொற்று குறைந்தால் தானே, அரடியல் வியாதிகள் பறந்து பறந்து சென்று பரப்பி அடுத்த அலைக்கு அஸ்திவாரம் போட முடியும்?
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
28-ஜூலை-202119:09:14 IST Report Abuse
jagan 40 கோடி பேருக்கு தடுப்பூசி ஊசி (மேலும் 20 கோடி பேருக்கும் செப் 1 க்குள்), நிறைய பேருக்கு இப்போ தான் வந்து போனது எனவே எதிர்ப்பு சக்தி கொஞ்ச நாளுக்காவது இருக்கும். இபோதைக்கு மூன்றாம் அலை வர வாய்ப்பில்லை.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
28-ஜூலை-202112:32:25 IST Report Abuse
A.George Alphonse குறைந்தாலும் ஏதோ ஒரு காரணம். அதிகரித்தாலும் ஏதோ ஒரு காரணம். இவர்கள் கற்பனைக்கு அளவே இல்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X