பொது செய்தி

இந்தியா

2 - 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ்: கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
புதுடில்லி: 2 வயது முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ் கோவிட் தடுப்பூசியின் 2, 3வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடத்த சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு சில நிபந்தனைகளுடன் இந்திய மருந்துக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.இந்தியாவின் சீரம் நிறுவனம் அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோவோவேக்ஸ் என்ற குழந்தைகளுக்கான

புதுடில்லி: 2 வயது முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ் கோவிட் தடுப்பூசியின் 2, 3வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடத்த சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு சில நிபந்தனைகளுடன் இந்திய மருந்துக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.



latest tamil news



இந்தியாவின் சீரம் நிறுவனம் அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோவோவேக்ஸ் என்ற குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியின் முதல்கட்ட கிளினிக்கல் பரிசோதனை 1,400 குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட நிலையில் அதில் எந்தக் குழந்தைக்கும் எதிர்மறையான பாதிப்பும் ஏற்படவில்லை.


latest tamil news



இதையடுத்து 2, 3வது கிளினிக்கல் பரிசோதனைக்கு சீரம் நிறுவனம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால், அதில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததையடுத்து, அந்த விண்ணப்பத்தை இந்திய மருந்துக்கட்டுப்பாட்டு அமைப்பு திருப்பி அனுப்பியது. திருத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அறிக்கையை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் கடந்த வாரம் தாக்கல் செய்தது. சில நிபந்தனைகளுடன் 2, 3வது கிளினிக்கல் பரிசோதனை நடத்த சீரம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X