தேனி: அதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது எனவும், தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி பொறுப்பேற்றது. ஆனால், ஆட்சியில் அமர்ந்தும் இன்னும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழகம் முழுவதும் அதிமுக.,வினர் போராட்டம் நடத்தினர். தேனி மாவட்டம் போடியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது சசிகலா ஆடியோ தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பன்னீர்செல்வம் கூறியதாவது: அதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது. கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது. நான்கரை ஆண்டுகளாக நானும், பழனிசாமியும் ஒன்றாக இணைந்து தனிப்பட்ட குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் அதிமுக.,வை வழிநடத்தி வருகிறோம். எந்த நோக்கத்திற்காக அதிமுக கட்சி தொடங்கப்பட்டதோ, அந்த நிலை தொடரும். தேர்தலில் எம்ஜிஆர்., ஜெயலலிதாவை முன்னிறுத்தவில்லை என அன்வர் ராஜா பேசியது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE