பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஏன் விவாதிக்க கூடாது?: ராகுல் கேள்வி

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ள பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் தொடர்பாக பார்லி.,யின் அவைகளில் ஏன் விவாதிக்க கூடாது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வியெழுப்பியுள்ளார்.மொபைல் போன் ஒட்டுக்கேட்பு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பார்லிமென்ட் இரு அவைகளில் எந்த
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ள பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் தொடர்பாக பார்லி.,யின் அவைகளில் ஏன் விவாதிக்க கூடாது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வியெழுப்பியுள்ளார்.

மொபைல் போன் ஒட்டுக்கேட்பு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பார்லிமென்ட் இரு அவைகளில் எந்த பணிகளும் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.


latest tamil news


இந்நிலையில் பார்லிமென்டில், எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம், காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் நடந்தது. ராகுல், திமுக எம்.பி., திருச்சி சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ராகுல் பேசும்போது, பார்லிமென்ட்டை இயங்க அனுமதிக்கவில்லை எனக்கூறி எதிர்க்கட்சிகளை பிரதமர் அவமதிக்கிறார். நாங்கள், குடிமக்கள், விவசாயிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரங்களை தான் எழுப்புகிறோம் என தெரிவித்தார். இதற்கு மற்ற கட்சி தலைவர்கள் ஆதரவு அளித்தனர்.


latest tamil news


கூட்டம் முடிந்த பின்னர் ராகுல் கூறுகையில், ‛பணவீக்கம், பெகாசஸ் மற்றும் விவசாயிகள் பிரச்னைகளில் நாங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை. இது குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்தப்பட வேண்டும்,' எனக்கூறினார்.

பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் பார்லி., வளாகத்தில் கொட்டும் மழையில் நனைந்தவாறு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராகுல் கூறியதாவது: ஒட்டுக்கேட்பதற்காக பெகாசஸ் ஸ்பைவேரை இந்திய அரசு வாங்கியதா இல்லையா என்ற ஒரே ஒரு கேள்வியை தான் நாங்கள் கேட்கிறோம். அதற்கு மத்திய அரசு பதில் சொல்லியாக வேண்டும். பெகாசஸ் என்னும் ஆயதத்தை சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக மத்திய அரசு பயன்படுத்தியுள்ளதா? பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் எந்த விவாதமும் நடைபெறாது என மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது.


latest tamil news


பிரதமர் நரேந்திர மோடி உங்கள் தொலைபேசியில் ஒரு ஆயுதத்தை அனுப்பியுள்ளார். இந்த ஆயுதம் எனக்கு எதிராக மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றம், பல தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை ஏன் பார்லி.,யின் அவைகளில் விவாதிக்க கூடாது? பார்லியில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது.


latest tamil news


பார்லிமென்ட் நடவடிக்கைகளை நாங்கள் தொந்தரவு செய்கிறோம் எனக் கூறுகின்றனர். நாங்கள் சபையைத் தொந்தரவு செய்யவில்லை, எங்கள் கடமைகளை நிறைவேற்ற விரும்புகிறோம். இந்த ஆயுதம் (பெகாசஸ்) பயங்கரவாதிகள் மற்றும் தேச விரோதிகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. பெகாசஸ் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி விரிவான விளக்கம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
28-ஜூலை-202122:20:11 IST Report Abuse
sankaseshan நாராயணா 60 வருஷமாக கிழிக்காததை 7 வருஷத்துல கிழிக்க சொல்லற , வெட்கமாக இல்லை ?
Rate this:
Cancel
Jai -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூலை-202121:39:54 IST Report Abuse
Jai காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது கனிமொழி ஆடியோ ராஜாத்தியம்மாள் ஆடியோ சண்முகநாதன் ஆடியோ எப்படி வெளியே வந்தது? அப்ப இதே மாதிரி வேலையை நீங்க செஞ்சுகிட்டு இருந்தீங்க.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
28-ஜூலை-202120:56:59 IST Report Abuse
Nagarajan D அப்படியே வருஷத்திலே ஒரு 3 மாசம் எதிர் கட்சி முதலாளி மகன் நீ எங்கே போகிறாய் என்ன செய்கிறாய் எனவும் விவாதிக்கலாமா
Rate this:
Rajas - chennai,இந்தியா
28-ஜூலை-202123:16:17 IST Report Abuse
Rajasதேர்தல் பத்திரம் குறித்து கூட விவாதிக்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X