இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டுகள் பயணத் தடை: சவுதி

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ரியாத்: இந்தியா உள்ளிட்ட சிகப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சவுதி அரேபியர்கள் சென்று திரும்பினால் 3 ஆண்டுகள் பயண தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கோவிட் வைரஸின் புதிய வகைகளை தடுக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு கடந்த மே
india, saudi arabia, covid19,கோவிட், இந்தியா, சவுதி, பயணத்தடை

ரியாத்: இந்தியா உள்ளிட்ட சிகப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சவுதி அரேபியர்கள் சென்று திரும்பினால் 3 ஆண்டுகள் பயண தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கோவிட் வைரஸின் புதிய வகைகளை தடுக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு கடந்த மே மாதம் தான் சவுதி குடிமக்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் விதிகளை மீறினர். தற்போது உருமாறிய வைரஸ் வகை அச்சுறுத்தலாக இருப்பதால் அரசின் சிகப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நேரடியாகவும், வேறு நாட்டிற்கு சென்று அங்கு செல்வதும் கூடாது. அப்படி பயணித்து திரும்பினால் சட்ட நடவடிக்கை மற்றும் கடுமையான அபாரதம் விதிக்கப்படும். மேலும் 3 ஆண்டுகள் வெளிநாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்படும், என கூறினர்.


latest tamil news


சவுதி தற்போது அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, லெபனான், பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, துருக்கி, வியட்நாம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்துள்ளது. சுமார் 3 கோடி மக்கள் தொகை கொண்ட சவுதியில் 2020-ல் தினசரி 4 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. ஜனவரியில் அது நூறாக குறைந்தது. தற்போது இரண்டாம் அலையில் மீண்டும் ஆயிரங்களில் பதிவாகிறது. செவ்வாயன்று 1,379 பேரிடம் கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூலை-202119:04:15 IST Report Abuse
அப்சாமி சவுதியிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்யலாம். அது மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-ஜூலை-202114:12:13 IST Report Abuse
Natarajan Ramanathan சவூதியில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்துவதை தடைசெய்ய முடியுமா என்று பாருங்கள். அதுதான் இந்தியாவுக்கு தீராத பெரும் தலைவலியாக இருக்கிறது.
Rate this:
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
28-ஜூலை-202113:15:07 IST Report Abuse
B. இராமச்சந்திரன் இந்தியா உட்பட தடைசெய்யப்பட்ட 9 நாடுகளுக்கு சென்றால், தடைசெய்யப்படாத மற்ற நாடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்துவிட்டு மீண்டும் சவூதி திரும்பலாம் என்ற விதிவிலக்கும் சவூதி குடிமக்களுக்கும் மற்றும் பிறநாட்டினருக்கும் இருக்கிறது.. ஆகஸ்ட் 1 முதல் சவூதி குடிமக்கள், தடுப்பூசி 2 டோஸும் எடுத்துக்கொள்ளாமல் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X