தீவிரமாக பரவும் டெல்டா: ஊரடங்கை நீட்டித்தது ஆஸ்திரேலியா

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சிட்னி: டெல்டா வகை கோவிட் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிட்னியில் மேலும் நான்கு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்து உள்ளதாவது: டெல்டா வகை கோவிட் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிட்னியில் ஆகஸ்ட் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு

சிட்னி: டெல்டா வகை கோவிட் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிட்னியில் மேலும் நான்கு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.latest tamil newsஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்து உள்ளதாவது: டெல்டா வகை கோவிட் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிட்னியில் ஆகஸ்ட் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இன்று (ஜூலை 27) மட்டும் 177 பேருக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்மேற்கு சிட்னியில் அமலில் உள்ள கடுமையான ஊரடங்கு நகரின் மேற்கு பகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நகரின் மற்ற பகுதிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


latest tamil newsகோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு வாரத்திற்கு 74,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும். ஊதியத்தை இழந்த குறைந்த வருமானத்தை ஈட்டும் குடும்பத்தினருக்கு கூடுதல் சமூக நல உதவித் தொகை வழங்கப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் சதவிகிதம் அதிகரித்தால் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான உத்தரவுகள் இந்தாண்டு இறுதிக்குள் திரும்பப்பெற்று கொள்ளப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
28-ஜூலை-202118:32:13 IST Report Abuse
raghavan பாவம் ரொம்ப பயப்படறாங்க இங்க ஒரு நாளைக்கு நாலு லட்சம் தொற்றெல்லாம் பார்த்தாச்சு. அந்த சமயங்களில் கூட கடையை திறந்ததும் கூட்டந்தான் முககவசமாவது மண்ணாங்கட்டியாவது முட்டி மோதி போய்க்கிட்டே இருந்தாங்க.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
28-ஜூலை-202121:02:26 IST Report Abuse
Sanny பயம் இல்லை நண்பரே வருமுன் காப்பது என்பது இதுதான். உலகில் அதிக குறைந்த கொரோன பாதிக்கப்பட்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. மனித நேயம் என்ன என்பதை கவனியுங்க சகோ. இங்கே கொரோனவை பரப்புவதில் முன் நிட்பவர்கள் வந்தேறி குடிமக்களே....
Rate this:
Cancel
Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா
28-ஜூலை-202114:18:29 IST Report Abuse
Natesan Narayanan சிட்னி சார்த்த பகுதி மட்டும் தான் .
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-ஜூலை-202113:39:42 IST Report Abuse
Kasimani Baskaran சிங்கப்பூரில் ஓரிலக்கத்தில் இருந்து ஈரிலக்கமாகி இப்பொழுது மூன்றிலக்கத்தில் இருக்கிறது (நேற்று பாதிக்கப்பட்டவர்கள் 136). முதலில் இருந்தது போல உணவு விடுதிகள் சாப்பிட அனுமதி கிடையாது - ஆனால் சாப்பாட்டை பொட்டலம் கட்டி மட்டுமே வீடுகளுக்கு அனுப்ப முடியும். இருவருக்குமேல் கூட முடியாது. தேசிய தினக்கொண்டாட்டத்தையே தள்ளி வைத்து விட்டார்கள். பாதிக்குமேல் தடுப்பூசி போட்டே இந்த நிலை. மிச்சமிருப்போரை விரைவாக தடுப்பூசி போல வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். சொன்னப்டி கேளாத ஆடுகளுக்கு பிரச்சினை என்பது பலருக்கு புரியவில்லை. மாட்டுக்கு தார் வைப்பது போல தினமும் பத்திரிக்கைகளில் அரைப்பக்க விளம்பரம் கொடுக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X