"பார்லி., சட்டசபையில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவது கருத்து சுதந்திரம் அல்ல"

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: பார்லிமென்டிலோ, சட்டசபையிலோ பொதுச்சொத்துகளை எம்.பி.,க்கள் , எம்எல்ஏ.,க்கள் சேதப்படுத்துவது கருத்து சுதந்திரம் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடந்த 2015ம் ஆண்டு கேரள சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின் போது, தற்போது ஆளுங்கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், சபையில் உள்ள மைக்குகள், நாற்காலிகள்
SupremeCourt, Dismisses, KeralaGovt Petition, Prominent, CPIM, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், சட்டசபை, பார்லிமென்ட், அமளி, பொதுச்சொத்துகள், கருத்து சுதந்திரம், நீதிபதிகள், கேரளா, தள்ளுபடி

புதுடில்லி: பார்லிமென்டிலோ, சட்டசபையிலோ பொதுச்சொத்துகளை எம்.பி.,க்கள் , எம்எல்ஏ.,க்கள் சேதப்படுத்துவது கருத்து சுதந்திரம் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு கேரள சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின் போது, தற்போது ஆளுங்கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், சபையில் உள்ள மைக்குகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை ரத்த செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தும், நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்தது. இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


latest tamil news


இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: பார்லிமென்ட், சட்டசபையில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவது கருத்து சுதந்திரம் அல்ல. எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கான பாதுகாப்பு என்பது தடையின்றி தொடர்ந்து பணி செய்ய மட்டும்தான். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்தமாதிரியான வழக்கை தொடர்ந்திருக்கிறீர்கள். ஆனால் எம்.பி.,க்களோ, எம்.எல்.ஏ.,க்களோ சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. கிரிமினல் விவகாரங்களில் ஈடுபடும் போது அவற்றில் இருந்து தப்பிக்க முடியாது. இவ்வாறு கூறியதுடன் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
29-ஜூலை-202104:53:40 IST Report Abuse
Siva Kumar அப்படி என்றால் இந்த மாதிரி வன்முறையில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு உச்ச நீதிமன்றம் குறைந்தது ஒரு கோடி அபராதமும் பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கொடுக்க தயாரா? அதற்கான தைரியம் இன்றைய நீதிபதிகளுக்கு உள்ளதா?
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
28-ஜூலை-202121:19:16 IST Report Abuse
தத்வமசி ஆறு வருடங்கள் தானே ஆகிறது. அப்படியே இன்னும் பல வருடங்கள் இழுத்து விடலாம். முடிவு தெரிந்து என்ன செய்யப் போகிறோம் ?எதிர்கட்சியாக இவன் உடைத்தால் இவனுக்கு ஓட்டு, பிறகு அடுத்த கட்சி எதிர்கட்சியாக இப்படி உடைக்கும் போது அவனுக்கு ஓட்டு என்று மாற்றி மாற்றி ஓட்டு போட்டு நடுத்தெருவில் நிற்பது திருவாளர் பொதுஜனம்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-ஜூலை-202119:26:30 IST Report Abuse
sankaseshan நாங்க எங்க கடமயை செஞ்சிட்டோம் ஆளை விடுங்கடா சாமி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X