சீனாவில் புழுதிப்புயல்: வைரலாகும் அதிர வைக்கும் காணொளி| Dinamalar

சீனாவில் புழுதிப்புயல்: வைரலாகும் அதிர வைக்கும் காணொளி

Updated : ஜூலை 29, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (8)
Share
பீஜிங்: சீனாவின் டன்ஹூவாங் நகரத்தில் 300 அடி உயரத்திற்கு எழுந்த புழுதிப் புயல் நகரைச் சூழ்ந்ததால் மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கினர்.சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சுவில் உள்ள கோபி பாலைவன எல்லையில் அமைந்துள்ள நகரம் டன்ஹுவாங். இந்த நகரத்தில் நேற்று (ஜூலை 27) ஏற்பட்ட புழுதிப்புயல் மக்களைக் கலங்கடித்துள்ளது. சுமார் 300 அடி உயரத்திற்கு திடீரென எழுந்த

பீஜிங்: சீனாவின் டன்ஹூவாங் நகரத்தில் 300 அடி உயரத்திற்கு எழுந்த புழுதிப் புயல் நகரைச் சூழ்ந்ததால் மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கினர்.



latest tamil news



சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சுவில் உள்ள கோபி பாலைவன எல்லையில் அமைந்துள்ள நகரம் டன்ஹுவாங். இந்த நகரத்தில் நேற்று (ஜூலை 27) ஏற்பட்ட புழுதிப்புயல் மக்களைக் கலங்கடித்துள்ளது. சுமார் 300 அடி உயரத்திற்கு திடீரென எழுந்த புழுதிப்புயல்,டன்ஹூவாங் நகரத்தைச் சூழ்ந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கினர்.


5 முதல் 6 நிமிடங்களுக்குள் மொத்த நகரத்தையும் புழுதிப்புயல் சூழும், திரைப்படக் காட்சிகளில் வரும் பேரலை தாக்குவது போன்ற காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X