பொது செய்தி

தமிழ்நாடு

சங்கரய்யாவிற்கு ''தகைசால் தமிழர்'' விருது: தமிழக அரசு

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
சென்னை: இந்த ஆண்டிற்கான '' தகைசால் தமிழர்'' விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் என்.சங்கரய்யாவிற்கு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த, 'தகைசால் தமிழர்' என்ற பெயரில், புதிய விருது உருவாக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார் இதற்கான
சங்கரய்யா, தகைசால் தமிழர், விருது, தமிழக அரசு,

சென்னை: இந்த ஆண்டிற்கான '' தகைசால் தமிழர்'' விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் என்.சங்கரய்யாவிற்கு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த, 'தகைசால் தமிழர்' என்ற பெயரில், புதிய விருது உருவாக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார் இதற்கான விருதாளர்களை தேர்வு செய்ய, முதல்வர் தலைமையில், தொழில் துறை, தமிழ் ஆட்சிமொழித் துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் உத்தரவிட்டு இருந்தார்.


latest tamil news



இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: விருது பெறுபவரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம், தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அக்கூட்டத்தில், மாணவர் தலைவராகவும், சுதந்திர போராளியாகவும், எம்.எல்.ஏ.,வாகவும் பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவிற்கு, இந்த ஆண்டிற்கான '' தகைசால் தமிழர்'' விருது வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. சங்கரய்யாவிற்கு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் வரும் ஆக.,15ல் ந டக்கும் சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


சங்கரய்யா நன்றி


latest tamil news


விருது தொடர்பாக சங்கரய்யா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தகைசால் தமிழர்'' விருதை ஏற்று கொள்வதோடு, விருதை அளித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த விருதுடன் அளிக்கப்படும் ரூ.10 லட்சம் தொகையை கோவிட் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியுடன் வழங்குகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூலை-202108:18:56 IST Report Abuse
ஆரூர் ரங் தகை சால் என்பதை தொகை சால் என 😇மாற்றிவிடலாம். கூட்டணிக்கு ரேட் பேசி 10 கோடி வாங்கியது எந்த விதமான தகைமை?
Rate this:
Cancel
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
29-ஜூலை-202100:18:43 IST Report Abuse
Gurumurthy Kalyanaraman பழங்காலத்தில் ஒரு முது பெரும் தலைவர் வாங்கிய யுனெஸ்கோ விருது போன்றது தான் இது. இதுவும் 'நமக்கு நாமே' திட்டத்தின் ஒரு பகுதியே.
Rate this:
Cancel
28-ஜூலை-202122:17:42 IST Report Abuse
kulandhai Kannan தகை சாலுக்கு என்ன அர்த்தம் என்று ஸ்டாலினுக்குத் தெரியுமா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X