பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., கவுன்சிலிங் மாணவர்களுக்கு அறிவுரை

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
சென்னை : இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், முதல் நாள் விண்ணப்பித்த மாணவர்கள், பதிவுகளை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது. www.tneaonline.org என்ற இணையதளத்தில், மாணவர்கள் தங்கள் விபரங்களை 'ஆன்லைன்' வழியில் பதிவு செய்யலாம். ஆக., 24 வரை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.முதல்


சென்னை : இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், முதல் நாள் விண்ணப்பித்த மாணவர்கள், பதிவுகளை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது. www.tneaonline.org என்ற இணையதளத்தில், மாணவர்கள் தங்கள் விபரங்களை 'ஆன்லைன்' வழியில் பதிவு செய்யலாம். ஆக., 24 வரை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.முதல் நாளில், 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். நேற்று, 41 ஆயிரத்து, 363 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 20 ஆயிரத்து, 660 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 13 ஆயிரத்து, 508 பேர், சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் விண்ணப்ப பதிவு செய்தவர்கள், தங்களின் விண்ணப்ப விபரங்களை சரிபார்த்து கொள்ள இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. அரசின் புதிய இட ஒதுக்கீட்டு அறிவிப்பின்படி, ஜாதி மற்றும் இன ரீதியான பட்டியல்கள் திருத்தப்பட்டுள்ளதால் அதற்கேற்ப திருத்தப்பட்ட விண்ணப்பத்தை மாணவர்கள் சரிபார்த்து பிரதி எடுத்து கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X