'புக்கர்' விருது பட்டியலில் இந்திய எழுத்தாளரின் நாவல்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
லண்டன்:இந்தாண்டுக்கான 'புக்கர்' விருது பட்டியலில் பிரிட்டனில் வசிக்கும் இந்திய எழுத்தாளரின் 'சீனா ரூம்' என்ற நாவலும் இடம் பெற்றுள்ளது.பல நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்பில் வெளியான நூல்கள், நாவல்கள் மற்றும் புதினங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஐரோப்பிய நாடான பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியாகும் புத்தகங்களில் சிறந்த

லண்டன்:இந்தாண்டுக்கான 'புக்கர்' விருது பட்டியலில் பிரிட்டனில் வசிக்கும் இந்திய எழுத்தாளரின் 'சீனா ரூம்' என்ற நாவலும் இடம் பெற்றுள்ளது.பல நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்பில் வெளியான நூல்கள், நாவல்கள் மற்றும் புதினங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஐரோப்பிய நாடான பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியாகும் புத்தகங்களில் சிறந்த புத்தகத்துக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் வெளியான 158 புத்தகங்களில் இருந்து 13 புத்தகங்களை அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.இதில் பிரிட்டனில் வசிக்கும் இந்தியரான சஞ்சீவ் சகோடா 40, எழுதிய 'சீனா ரூம்' என்ற நாவலும் இடம் பெற்றுள்ளது.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சஹோடா பிரிட்டனிலேயே பிறந்து வளர்ந்தவர். ஆங்கில நாவலாசிரியரான இவர் இலக்கியத்துக்கான ஐரோப்பிய யூனியன் பரிசை வென்றுள்ளார்.தேர்வு செய்யப்பட்டுள்ள 13 புத்தகங்களில் செப்.ல் நடக்கும் இறுதி சுற்றுக்கு ஆறு புத்தகங்கள் தேர்வு செய்யப்படும். அதிலிருந்நு சிறந்த புத்தகம் தேர்வு செய்யப்பட்டு இந்தஆண்டுக்கான புக்கர் பரிசு நவ. 3ல் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுத் தொகை 52 லட்ச ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X