பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் மறியல் செய்த 250 பேரை கைது செய்ய திட்டமிட்டதால் தலைமறைவு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
அரக்கோணம்: அரக்கோணம் அருகே, ரயில் மறியல் செய்த 250 பேரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டதால் அவர்கள் தலைமறைவாகினர்.திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து வேலுார், அரக்கோணம் வழியாக சென்னைக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு முன்பு இதில் சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டு ஏராளமானோர் சென்று வந்தனர். தற்போது சீசன் டிக்கெட் வழங்குவது

அரக்கோணம்: அரக்கோணம் அருகே, ரயில் மறியல் செய்த 250 பேரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டதால் அவர்கள் தலைமறைவாகினர்.

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து வேலுார், அரக்கோணம் வழியாக சென்னைக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு முன்பு இதில் சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டு ஏராளமானோர் சென்று வந்தனர். தற்போது சீசன் டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டு முன்பதிவு செய்தவர்கள் மட்டும் இந்த ரயிலில் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரக்கோணம் அருகே அன்வர்த்திகான்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் கடந்த 26ம் தேதி ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி மூன்று மணி நேரம் மறியலில் பயணிகள் ஈடுபட்டனர்.

இது குறித்து சித்தேரி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கஜபதி கொடுத்த புகாரின்படி, அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மறியலில் ஈடுபட்ட 250 பேர் மீது 27ல் வழக்கு பதிவு செய்தனர். இந்த கோரிக்கை வலியுறுத்தி அவர்கள் மீண்டும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்ட 250 பேரை கைது செய்து சிறையில் அடைக்க முடிவு செய்து அவர்கள் வீடுகள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதனால் 250 பேரும் இன்று தலைமறைவாயினர். அரக்கோணம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ரவி கூறியது: ரயில் மறியலில் ஈடுபட்ட 250 பேர் மீது வழக்கு பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் சீசன் டிக்கெட் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X