பொது செய்தி

தமிழ்நாடு

'5 ஆண்டில் 18 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு'

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கோவை : ''கோவையில், ஆளுக்கொரு மரம் என்ற அடிப்படையில், ஐந்து ஆண்டுகளில், 18 லட்சம் மரக்கன்று நட இலக்கு நிர்ணயித்துள்ளோம்,'' என, 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் தெரிவித்தார்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக, 'சிறுதுளி' மற்றும் 'ரோட்டரி கிளப் கேலக்ஸி' சார்பில், கோவை அண்ணா பல்கலை வளாகத்தில், 5,000 மரக்கன்று நடுவதற்கான துவக்க விழா நேற்று
 '5 ஆண்டில் 18 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு'


கோவை : ''கோவையில், ஆளுக்கொரு மரம் என்ற அடிப்படையில், ஐந்து ஆண்டுகளில், 18 லட்சம் மரக்கன்று நட இலக்கு நிர்ணயித்துள்ளோம்,'' என, 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக, 'சிறுதுளி' மற்றும் 'ரோட்டரி கிளப் கேலக்ஸி' சார்பில், கோவை அண்ணா பல்கலை வளாகத்தில், 5,000 மரக்கன்று நடுவதற்கான துவக்க விழா நேற்று நடந்தது.ரோட்டரி கவர்னர் ராஜசேகர் தலைமை வகித்தார். அண்ணா பல்கலை டீன் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.

'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது:

அண்ணா பல்கலை வளாகத்துக்குள், இதுவரை, 85 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். இதற்கு முன் முட்காடாக இருந்தது. இப்போது, பல்லுயிர் பெருக்கத்துக்கு மரங்களே காரணம். கடந்த, 18 ஆண்டுகளில், 7.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.கோவையில், 18 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டு பராமரித்தால் போதும். அவ்வாறு செய்தால், எளிதாக, ஐந்தாண்டுகளில், 18 லட்சம் மரங்கள் நட்டு விடலாம்.

இதை வலியுறுத்தி, 'பிளான்ட் 4 லைப் சேலஞ்ச்' என்ற இயக்கத்தை, சமூக வலைதளத்தில் துவக்கியுள்ளோம்.கலாம் பிறந்த நாளான, அக்., 15க்குள், கோவை அண்ணா பல்கலை வளாகத்துக்குள், ஒரு லட்சம் மரக்கன்று நட்டு முடிக்க, திட்டமிட்டுள்ளோம். கோவையின் பசுமை பரப்பு, 33 சதவீதமாக விரைவில் மாறும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

அண்ணா பல்கலை சிவக்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கவிதா, ரோட்டரி உதவி கவர்னர் பாஸ்கர், கேலக்ஸி ரோட்டரி தலைவர் கற்பகம், செயலாளர் பழனியப்பன், திட்ட தலைவர் பிரேம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X