ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிவதில் தாமதம் கூடாது| Dinamalar

'ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிவதில் தாமதம் கூடாது'

Added : ஜூலை 28, 2021
Share
புதுடில்லி : 'கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு மார்ச்சுக்குப் பின் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிவதில் தாமதம் என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா தொடர்பான வழக்குகளில் உதவி செய்ய, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டு உள்ள கவுரவ் அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா தொற்றால்


புதுடில்லி : 'கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு மார்ச்சுக்குப் பின் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிவதில் தாமதம் என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொடர்பான வழக்குகளில் உதவி செய்ய, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டு உள்ள கவுரவ் அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா தொற்றால் குழந்தைகள் பலர் தங்கள் பெற்றோரை இழந்துவிட்டனர். ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு மார்ச்சுக்குப் பின் ஆதரவை இழந்த குழந்தைகளை கண்டறிவதில் தாமதம் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது.ஆதரவை இழந்த குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசு அறிவித்துள்ள நிதியுதவி, சலுகைகள் உள்ளிட்டவை அவர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், போலீசார், சமூக நல அமைப்புகள் உதவியுடன், ஆதரவை இழந்த குழந்தைகளை கண்டறிய மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.கொரோனா தொற்றால் ஆதரவை இழந்த குழந்தைகள் பற்றிய அறிக்கையை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X