நாய்களுக்கு பார்வோ வைரஸ் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம்| Dinamalar

நாய்களுக்கு 'பார்வோ' வைரஸ் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம்

Added : ஜூலை 28, 2021
Share
கம்பம் : மனிதர்களை அச்சுறுத்தி வரும் கொரோனா போல நாய்களுக்கு 'பார்வோ' வைரஸ் ஒரு வாரமாக பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என கால்நடை டாக்டர்கள் கூறியுள்ளனர்.இந்த வைரஸ் காற்று மூலம் பரவக் கூடியது. அதிகபட்சம் 6 முதல் 8 நாட்களுக்குள் மரணம் ஏற்படும். வீடு, தெரு நாய்களுக்கும் பரவிவருகிறது. அறிகுறிகளாக வாந்தி, வயிற்றுப்போக்கு, சாப்பிடாமல் இருக்கும். முதல் சில

கம்பம் : மனிதர்களை அச்சுறுத்தி வரும் கொரோனா போல நாய்களுக்கு 'பார்வோ' வைரஸ் ஒரு வாரமாக பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என கால்நடை டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இந்த வைரஸ் காற்று மூலம் பரவக் கூடியது. அதிகபட்சம் 6 முதல் 8 நாட்களுக்குள் மரணம் ஏற்படும். வீடு, தெரு நாய்களுக்கும் பரவிவருகிறது. அறிகுறிகளாக வாந்தி, வயிற்றுப்போக்கு, சாப்பிடாமல் இருக்கும். முதல் சில நாட்களில் சரியான சிகிச்சை மேற்கொண்டால் காப்பாற்ற முடியும்.

தேனி மாவட்டம் கம்பம் கால்நடை டாக்டர் காமேஷ்கண்ணன் கூறுகையில்,

'கொரோனா போன்றது தான் பார்வோ வைரஸ் தாக்குதலும். பல நாய்கள் உயிரிழந்துள்ளன. இந்த வைரஸ் பிறந்து 30 நாட்கள் முதல் ஒரு வயது ஆகும் நாய்களுக்கு மட்டுமே பரவும். பெரிய நாய்களை தாக்காது. பிறந்து தாயை விட்டு பிரியும் போது அதன் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அப்போது இந்த வைரஸ் எளிதாக தாக்கும். மழைக்காலங்களில் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இதை தடுக்க 30 நாள் குட்டிக்கு தடுப்பூசி போட வேண்டும். பெரும்பாலானோர் வீட்டில் செல்லப்பிராணிகளாக வெளிநாடு வகை நாய்களை வளர்க்கின்றனர். இந்த வைரஸ் அனைத்து வகையான நாய்களுக்கும் பரவி வருகிறது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X