சோதனைச்சாவடியில் 'ரெய்டு': ரூ. 1.71 லட்சம் பறிமுதல்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
பாலக்காடு : வாளையார் மோட்டார் வாகன சோதனைச் சாவடியில், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத, 1.71 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.கேரளா மாநிலம், பாலக்காடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முன்தினம் இரவு, கோவை - பாலக்காடு எல்லையில் உள்ள வாளையார் மோட்டார் வாகன துறை சோதனைச் சாவடியை, ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, கோவையில் இருந்து தண்ணீர்

பாலக்காடு : வாளையார் மோட்டார் வாகன சோதனைச் சாவடியில், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத, 1.71 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளா மாநிலம், பாலக்காடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முன்தினம் இரவு, கோவை - பாலக்காடு எல்லையில் உள்ள வாளையார் மோட்டார் வாகன துறை சோதனைச் சாவடியை, ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, கோவையில் இருந்து தண்ணீர் பாட்டில் ஏற்றி வந்த லாரியின் டிரைவர், போக்குவரத்து துறை ஊழியர் ஒருவருக்கு லஞ்சம் அளித்தார். அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, அலுவலகத்தில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத, ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 975 ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X