பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 மாணவர் விபரம் பிழை திருத்த இறுதி அவகாசம்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
சென்னை : பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 2 மாணவர்களுக்கான பெயர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், தேர்வு துறையால் போதிய வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனாலும், தேர்வு முடிவு வந்த பின், பிழை திருத்தம் செய்ய கோரிக்கை வந்துள்ளது.எனவே, தற்போது மீண்டும் வாய்ப்பு

சென்னை : பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பிளஸ் 2 மாணவர்களுக்கான பெயர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், தேர்வு துறையால் போதிய வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனாலும், தேர்வு முடிவு வந்த பின், பிழை திருத்தம் செய்ய கோரிக்கை வந்துள்ளது.எனவே, தற்போது மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

பிளஸ் 2 மாணவர்களின் இனிஷியல், ஆங்கிலம், தமிழில் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், மொழி பாடம், பயிற்று மொழி, பள்ளியின் பெயர் ஆங்கிலத்திலும், தமிழிலும் பிழைகள் இருந்தால், அதை திருத்த இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தலைமை ஆசிரியர்கள் இந்த பணிக்கு முக்கியத்துவம் அளித்து, திருத்த விபரங்களை, இன்று முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.அவர்கள், நாளை முதல், 31ம் தேதிக்குள் அரசு தேர்வு துறை இணையதளத்தில் திருத்தங்களை பதிவேற்ற வேண்டும். பிழையில்லாத மதிப்பெண் சான்றிதழ் வழங்க, இந்த பணி முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X