ஓய்வூதிய பலன்களை பத்திரங்களாக வழங்க அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
தேனி : ஓய்வூதிய பலன்களை பத்திரங்களாக வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் லட்சுமி கூறியதாவது: 2003 ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வூதிய பலன்களை பறித்ததுடன் ஓய்வுகால பணப்பலன்களை பத்திரங்களாக வழங்கவும் உத்தரவிட்டார். அதை எதிர்த்து அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஆதரித்த முன்னாள்

தேனி : ஓய்வூதிய பலன்களை பத்திரங்களாக வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் லட்சுமி கூறியதாவது:

2003 ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வூதிய பலன்களை பறித்ததுடன் ஓய்வுகால பணப்பலன்களை பத்திரங்களாக வழங்கவும் உத்தரவிட்டார். அதை எதிர்த்து அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஆதரித்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதும் டெஸ்மா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 1.75 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்.

பிறகு வந்த தேர்தல்களில் அ.தி.மு.க.,வின் சரிவிற்கு இந்த சம்பவம் முக்கிய காரணமானது.பின்னர் ஓய்வூதிய பலன்களை பத்திரங்களாக கொடுக்கும் முடிவை ஜெயலலிதா 'வாபஸ்' வாங்கினார். 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட அனைவருக்கும் பணி வழங்கி, வேலை நிறுத்த காலத்தை ஈட்டிய விடுப்பாக அறிவித்தார்.தற்போது ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கவும், ஓய்வூதிய பலன்களை பத்திரங்களாக வழங்கவும் நிதித்துறை அமைச்சர் பரிந்துரையில் அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய மீண்டும் ஒரு குழு அமைக்கவும் உள்ளது. இது அரசு ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே ஓய்வூதிய பலன்களை பத்திரங்களாக வழங்கும் திட்டத்தை கைவிடவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X