கொரோனா காலத்தில் அமெரிக்காவுக்கு உதவிய இந்தியா: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா ஆரம்ப காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியதாகவும், தற்போது இந்தியாவிற்கு உதவுவதில் பெருமைக்கொள்வதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இந்த
US, India, Blinken, Covid, Respect,

புதுடில்லி: கொரோனா ஆரம்ப காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியதாகவும், தற்போது இந்தியாவிற்கு உதவுவதில் பெருமைக்கொள்வதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பிளிங்கன் பேசியதாவது: உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்கிறது. கொரோனா ஆரம்ப காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியது. தற்போது இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா பெருமைக்கொள்கிறது.


latest tamil news


கொரோனா தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும் தடுப்பூசி கூட்டாண்மையில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாகச் செயல்படும். நான் எனது குடும்பத்துடன் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளேன். இந்தியாவுக்கு மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். அமைதியான, பாதுகாப்பான மற்றும் நிலையான ஆப்கானிஸ்தானில் இந்தியாவும் அமெரிக்காவும் வலுவான ஆர்வத்தை பகிர்ந்து கொள்கின்றன. ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து முக்கிய பங்களிப்பை அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-202101:14:33 IST Report Abuse
Akash Both scared of china but cant do anything
Rate this:
Cancel
Vittalamand -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூலை-202122:11:59 IST Report Abuse
Vittalamand ஆப்கானிஸ்தானில் இந்திய படைகளை அனுப்பி தலிபானை ஏதிர் கொள்ள கென்சல்.
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
28-ஜூலை-202117:38:48 IST Report Abuse
ஆனந்த் பாவம் டுமீளர்களுக்கு மட்டும் இது தெரியாமல் போச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X