சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் அதிமுக போஸ்டர்களை கிழித்தெறிந்த போலீசார்

Added : ஜூலை 28, 2021
Share
Advertisement
கோவை:திமுக அரசை கண்டித்து கோவை புறநகர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்த அறிவிப்பு போஸ்டர்களை போலீசாரை கிழித்தெறிந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோவை புறநகர் மாவட்டத்தில் இன்று அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக

கோவை:திமுக அரசை கண்டித்து கோவை புறநகர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்த அறிவிப்பு போஸ்டர்களை போலீசாரை கிழித்தெறிந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை புறநகர் மாவட்டத்தில் இன்று அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கோவில்பாளையம், கீரணத்தம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான போஸ்டர்கள் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டிருந்தன. இன்று காலையில் பார்த்தபோது அந்த போஸ்டர்கள் ஏராளமானவை கிழிக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து அதிமுகவினர் அப்பகுதியில் இருந்த சிசி கேமரா வை பரிசோதித்து பார்த்தபோது சீருடை அணிந்த போலீசாரை பல இடங்களில் அந்த போஸ்டர்களை கிழிக்கும் காட்சிகள் வெளியானது. சில இடங்களில் மர்மநபர்கள் கிழித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை புறநகர் மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் எம்எல்ஏவான அருண் குமார் கூறுகையில் இது குறித்து கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளோம். சமூக விரோத செயலை தடுக்க வேண்டிய போலீசாரே இச்செயலில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து காவல்துறையில் புகார் செய்ய உள்ளோம். கட்சித் தலைமையுடன் தெரிவித்து அடுத்தகட்ட போராட்டம் முடிவு செய்யப்படும் என்றார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X