சோனியா , கெஜ்ரிவாலுடன் மம்தா சந்திப்பு

Updated : ஜூலை 28, 2021 | Added : ஜூலை 28, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: பா.ஜ.,விற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் உள்ளது என டில்லி சென்ற மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மூன்று நாள் பயணமாக டில்லி சென்றுள்ளார். பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து, 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிரான அணியை உருவாக்க அவர் முயற்சித்து வருகிறார். இந்நிலையில் காங்., தலைவர்கள்
சோனியா , கெஜ்வால், மம்தா சந்திப்பு

புதுடில்லி: பா.ஜ.,விற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் உள்ளது என டில்லி சென்ற மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மூன்று நாள் பயணமாக டில்லி சென்றுள்ளார். பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து, 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிரான அணியை உருவாக்க அவர் முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் காங்., தலைவர்கள் கமல்நாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரை நேற்று சந்தித்தார். பின் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். .கொரோனா நிலவரம், மேற்கு வங்கத்துக்கான தடுப்பூசி வினியோகம், மேற்கு வங்க பெயரை 'பங்களா' என மாற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதித்தேன் என்றார்.


latest tamil news



இதையடுத்து இன்று மாலை காங்., மூத்த தலைவர் சோனியாவையும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் மம்தா சந்தித்து பேசினார்.

அதன்பின், மம்தா பானர்ஜி கூறியதாவது:

சோனியா என்னை தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தார். இது ஒரு நல்ல சந்திப்பாக அமைந்தது. இதன் விளைவு எதிர்காலத்தில் தெரியும். பா.ஜ.,வை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் உள்ளது. அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும். பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்? என்று தெரியவில்லை. லோக்சபா முடங்கியுள்ளது. மக்கள் பிரச்சினைகள் இங்கு பேசப்பட வேண்டும். டீக்கடைகளில் மக்கள் பிரச்சினைகளைப் பேச முடியாது. அதை லோக்சபாவில் தான் விவாதிக்க வேண்டும். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
29-ஜூலை-202106:38:14 IST Report Abuse
 Muruga Vel வைக்கோ இந்த சந்திப்பில் இல்லாதது பெரிய குறை .
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
28-ஜூலை-202123:09:55 IST Report Abuse
s t rajan தாடகை, சூர்ப்பனகை, சகுனி சந்திப்பு.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூலை-202121:54:32 IST Report Abuse
 rajan உள்நாட்டு சூர்ப்பனகையும் வெளிநாட்டு ராமாயண கூனியும் சந்தித்து சதி திட்டம் போட்டு உலகநாயகன் உத்தம புருஷன் மோடியை விரட்ட முயலும் இவர்கள் தோல்வியை அடைவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X